முதிய வயதின்போது ஏற்படும் தலைமுடி உதிர்தல் இன்றோ இளைஞர்களுக்குப்
பெரும் மன அழுத்தத்தைக் கொடுக்கும் நிகழ்வாக மாறிவிட்டது.
முடியின் அடர்த்தி குறைதல், கொத்துக் கொத்தாக முடி உதிர்தல், முடியில் வலுவின்மை
இப்படி தலைமுடியின் ஆரோக்கியம் குறைவதற்குப் பல்வேறு காரணங்களைப்
பட்டியலிடலாம். இதற்கெல்லாம் முதன்மையான காரணம் ஊட்ட உணவுகளை ஒதுக்கி
வைத்தது. இந்த நிலையில் முடி உதிர்வைத் தடுக்க பஞ்ச கீரைத் துவையல்
அல்லது கடையல் உதவும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.
கறிவேப்பிலை, முருங்கைக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, பொன்னாங்கண்ணிக்
கீரை, புளிச்ச கீரை… இந்த ஐந்து வகையான கீரைகளோடு உளுத்தம் பருப்பு,
கடலைப் பருப்பு, தக்காளி, சின்ன வெங்காயம், மிளகாய் ஆகியவற்றைப்
பயன்படுத்தி துவையல் போல செய்து மதிய வேளையில் சாதத்தில் பிசைந்து
சாப்பிடலாம். 5 Spinach for Hair Growth
மேற்சொன்ன ஐந்து கீரை ரகங்களைச் சேர்த்து கலவைக் கீரை கடையலைத்
தயாரித்தும் சாப்பிடலாம். இந்த பஞ்ச கீரைகளின் மூலம் தயாரிக்கப்படும்
தொடு உணவு வகைகள் சுவையாக இருப்பது மட்டுமன்றி தலைமுடி வளர்ச்சியையும்
கொடுக்கும். இதே கீரைகளைத் தனித்தனி உணவு ரகங்களாகச் சமைத்தும்
சாப்பிடலாம்.
தலைமுடியைப் பொறுத்தவரையில் போன பிறகு வருத்தப்படுவதைவிட, இருக்கும்போதே அதைப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகள், மன அழுத்தத்திலிருந்து வெளிவரும் வகையிலான வாழ்க்கை முறை, வாரம் இருமுறை எண்ணெய்க் குளியல் தலைமுடி வளர்ச்சிக்கான அஸ்திவாரங்கள் என்று பட்டியலிடுகிறார்கள். 5 Spinach for Hair Growth