ஒரே நேர்கோட்டில் 5 கிரகங்கள் வரும் அரிய காட்சியை நடிகர் அமிதாப் பச்சன், சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வானத்தில் 5 கிரகங்கள் ஒரேநேர்கோட்டில் தெரியும் அரிய நிகழ்வு நேற்று (மார்ச் 28) நடைபெற்றது. புதன், வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நேற்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரே நேர்கோட்டில் தெரிந்தது.
இந்த அரிய நிகழ்வை பூமியில் இருந்து தொலைநோக்கி வழியாகப் பார்க்கலாம் என்று நாசா தெரிவித்தது. பூமியில் இருந்து பார்ப்பதற்கு 5கிரகங்களும் ஒரேநேர்கோட்டில் தெரிந்தாலும், வானத்தில் அவ்வாறு இருக்காது என்று விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.
நேற்று வானத்தில் 5கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தெரிந்ததை சிலர் புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர்.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சமூக வலைதளப்பக்கத்தில் 5கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வந்திருந்த அரிய காட்சியை வீடியோவாக பகிர்ந்திருந்தார். 45வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில் நிலவின் அழகையும் அவர் எடுத்துக் காட்டியிருந்தார்.
அமிதாப் பச்சன் பகிர்ந்த வீடியோவை கண்ட அவரது ரசிகர்கள் மற்றும் இணைய வாசிகள் அதனை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் ஒரேநேர்கோட்டில் இருக்கும் கிரகங்களைப் பார்க்கும் போது, வானத்தில் அருகில் இருந்து கிரகங்களைப் பார்ப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்துகிறது என்று பலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக நடிகை ஷில்பா ஷெட்டி, ”வாவ்” என்று பதிவிட்டுள்ளார். நடிகர் சித்தார்த் கபூர், “இது மிகவும் அழகாக இருக்கிறது. இதை ஸ்டெல்லேரியம் செயலி மூலம் அற்புதமாக படம் பிடித்திருக்கிறது. இதுகுறித்து முன்னதாக நான் பதிவிட்டிருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பயனர், “எனது போன் கேமரா இவ்வளவு தெளிவாக இல்லை” என்று கூறியுள்ளார். இப்படி பலரும் அமிதாப் பச்சன் பகிர்ந்த வீடியோவிற்கு அவர்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் அந்த வீடியோ கோடிக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
மோனிஷா
உக்ரைனில் படித்த இந்திய மாணவர்கள் தேர்வு எழுத அனுமதி!
‘அங்காரகன்’ : இசையமைப்பாளராகும் பாடலாசிரியர் கார்த்திக்