உத்தரபிரதேச மாநிலத்தில் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய நான்கு பெண் போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 பெண் போலீசார் போஜ்பூரி பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது.
பாடலுக்கு நடனம் ஆடிய போது அவர்கள் காவலர் சீருடை அணியவில்லை. இருப்பினும் அவர்களை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து பதிவிட்டிருந்தனர்.
இந்தநிலையில், திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய காவல் ஆய்வாளர்கள் கவிதா பட்டேல், காமினி குஷ்வாகா, காஷிஷ் சாய்னி, சந்தியா சிங் ஆகிய நான்கு காவலர்களையும் பணி இடைநீக்கம் செய்து அயோத்தி காவல் கண்காணிப்பாளர் முனிராஜ் உத்தரவிட்டுள்ளார்.
பெண் போலீசார்கள் தரப்பில், நடனம் ஆடிய போது நாங்கள் காவல்துறை சீருடை அணியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
காவல் ஆய்வாளர்கள் திரைப்பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்வம்