‘அம்மாவ பிடிச்சு ஜெயில போடுங்க’: 3 வயது சிறுவனின் பரபரப்பு புகார்!

டிரெண்டிங்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது தாய் மீது புகார் தெரிவிக்க 3 வயது சிறுவன் ஒருவன் காவல் நிலையம் சென்ற சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது.

தாய் தனது சாக்லேட்டை திருடுவதாக புகார் தெரிவித்துள்ளான் அந்த சிறுவன்.

பொதுவாக குழந்தைகளுக்கு போலீஸை கண்டால் ஒரு பயம் இருக்கும். ஆனால், சதாம் எனும் மூன்று வயது சிறுவன் டெட்டாலி காவல் நிலையம் சென்று தன்னுடைய தாயாருக்கு எதிராக புகார் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகாரில் தனது தாய் தன்னை சாக்லெட் மற்றும் இனிப்பு பண்டங்களை சாப்பிட அனுமதிக்கவில்லை என்றும் அதையும் மீறி சாப்பிட்டால் அடிப்பதாகவும் அந்த சிறுவன் புகார் தெரிவித்துள்ளான்.

அந்த சிறுவனை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்தது சிறுவன் சதாமின் தந்தை ஆவார். கண்களுக்கு மைவைத்துக்கொண்டிருந்த போது சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவன் தாய் எவ்வளவு கூறியும் கேட்காமல் இருந்துள்ளான். அவனை அதட்டி லேசாக கன்னத்தில் அறைந்ததாக தெரிகிறது.

அழுதுகொண்டே இருந்த சதாம் தந்தை வந்ததும் புகார் தெரிவித்துள்ளான். அப்போது காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று கூறிய அந்த சிறுவன் தந்தையை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுத்துள்ளான்.

அந்த புகாரில், “எனது சாக்லெட்டுகளை அம்மா திருடிக்கொள்கிறார். அவரை பிடித்து ஜெயில போடுங்க” என்று கூறியுள்ளான்.

சிறுவனின் புகாரையும் அங்கிருந்த பெண் போலீஸ் ஒருவர் சிரித்தப்படியே எழுதி வாங்கிக் கொண்டார்.

இதையடுத்து தனது மகனை சமாதானப்படுத்திய தந்தை புகாரை வாபஸ் பெறவைத்து மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.

இந்த நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: எடப்பாடி சொன்ன பொய்!

திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *