இந்த ஆண்டு எதிர்பார்ப்பை எகிற வைக்கும் மொபைல் போன்கள் லிஸ்ட் இதோ!

Published On:

| By Selvam

2024 five highly anticipated mobile phones

மொபைல் போன்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் புதிதாக வெளியாகும் மொபைல் போன்கள் டெக் பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்தவகையில், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மொபைல் போன்கள் குறித்து பார்க்கலாம்… 2024 five highly anticipated mobile phones

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ்

ஐபோன் 16 வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் செப்டம்பர் மாதம் ஐபோன் 16 அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபோன் 16 மொபைல் போனில் , ஐஓஎஸ் 18 இயங்குதளங்களுடன் ஏஐ அடிப்படையிலான அப்டேட்ஸ் இருக்கலாம் என்று ப்ளூம்பெர்க் மார்க் குர்ன்மேன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2024 five highly anticipated mobile phones

ஒன்பிளஸ் 12

இந்தியாவில் ஜனவரி 23-ஆம் தேதி ஒன்பிளஸ் 12 மொபைல் போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 6.28 இன்ச் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ், ரெசலூயஷன் 1440 x 3168 பிக்சல்ஸ் போன்ற மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி S4

சாம்சங் கேலக்ஸி S4 மொபைல் போன் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இந்தியாவில் ஜனவரி 17-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. சாம்சங் கேலக்ஸி S4 மொபைல் போனில் ஏஐ தொழில்நுட்பம் புகுத்தப்படலாம் என்று டெக் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

2024 five highly anticipated mobile phones

 

ஜியோமி 14 புரோ

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஜியோமி 14 புரோ அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இருப்பினும் பிப்ரவரி மாதம் நடைபெறும் மொபைல் தகவல் தொடர்பு வருடாந்திர நிகழ்ச்சியில் இந்த மொபைல்  அறிமுகமாகலாம் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளது.

6.7 இன்ச் டிஸ்பிளே, 4880 எம்ஏஹெச் பேட்டரி, 50 எம்பி ரியர் கேமரா, 32 எம்பி செல்பி கேமரா வசதிகள் இந்த மொபைல் போனில் உள்ளது.

விவோ எக்ஸ் 100 சீரீஸ்

விவோ எக்ஸ் 100 மற்றும் விவோ எக்ஸ் 100 புரோ மொபைல் போன்கள் ஜனவரி 4-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. 6.78 இன்ச் வளைந்த அமோல்ட் டிஸ்பிளே, MediaTek Dimensity 9300 செயலி மூலம் 4-நானோமீட்டர் செயல்பாட்டின் அடிப்படையில் இந்த மொபைல் போன் இயங்குகிறது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ரூ.120 லட்சம் கோடி… தமிழ்நாட்டுக்கு வரலாறு காணாத நிதி : பிரதமர் பேச்சு!

40 மத்திய அமைச்சர்கள் 400 முறை தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர் : மோடி

2024 five highly anticipated mobile phones

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share