150 கோடி ட்விட்டர் கணக்குகள் நீக்கம்: எலான் மஸ்க்
சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான ட்விட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் மாத இறுதியில் விலைக்கு வாங்கினார்.
அந்நிறுவனத்தை வாங்கியதிலிருந்தே உயர் அதிகாரிகள் நீக்கம், நிர்வாக குழு கூண்டோடு கலைப்பு, ட்விட்டர் பயனாளர்களின் புளு டிக்கிற்கு கட்டணம் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது, பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கும் 150 கோடி ட்விட்டர் கணக்குகள் ட்விட்டரில் இருந்து நீக்கப்படும் என எலான் மஸ்க் இன்று (டிசம்பர் 9 ) அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “ட்விட்டர் விரைவில் 1.5 பில்லியன் கணக்குகளை நீக்கும். இவை ட்வீட்கள் மற்றும் பல ஆண்டுகளாக உள்நுழைவு இல்லாத கணக்கு நீக்கங்கள்,” என்று கூறியுள்ளார்.
முன்னதாக , ட்விட்டரில் பிரபலங்கள் பெயரில் இருக்கும் போலி கணக்குகள் நிரந்தரமாக நீக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
மாண்டஸ்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு!
இயற்கையை காப்பது நம் கடமை: மு.க.ஸ்டாலின்