15 lakh iPhone sales in Flipkart Amazon

ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனை!

டிரெண்டிங்

அமேசான், ஃபிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகளில் பண்டிகை கால ஆஃபர் விற்பனை அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமேசானின் ‘பிக் பில்லியன் டேஸ்’. ஃபிலிப்கார்டின் ‘தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ போன்ற பண்டிகை கால ஆஃபர் விற்பனை அறிவிக்கப்பட்டதிலிருந்தே பலரும் இதன் மூலம் ஐபோன், ஸ்மார்ட் போன், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இம்முறை இந்தியாவில், சுமார் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஃபர் காலம் அறிவிக்கப்பட்ட ஒரே வாரத்தில் நடைபெற்றுள்ள இந்த மாபெரும் விற்பனை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஐபோன் விற்பனை 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மேலும், ஐபோனுக்கு சமமாக ஜியோமி, சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களும் அதிக அளவில் விற்பனையாகியிருக்கிறது.

ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் கொண்ட மொபைல் போன்களில் 60 சதவீதம் விற்பனை அறிவிக்கப்பட்ட 48 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்ததாக ஆன்லைன் விற்பனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ஃபிலிப்கார்ட் தளத்தில் அதிகபட்ச விற்பனையாக ஐபோன் 14, சாம்சங் கேலக்சி(galaxy) S21 FE போன்ற மாடல்கள் உள்ளன. அமேசானில் 13 கேலக்சி( Galaxy) S23 FE போன்ற மாடல்கள் அதிக அளவில் விற்பனையானதாகத் தெரிகிறது.

ஷா

ஒரே வாரத்தில் 15 லட்சம் ஐபோன்கள் விற்பனை!

PAKvsAFG: சென்னையில் ’1999’ வெற்றியை மீண்டும் எதிர்பார்க்கும் பாகிஸ்தான்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *