மனிதவளம் மற்றும் பொறியியல் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 பேரை இன்று (ஜனவரி 18) மைக்ரோசாப்ட் நிறுவனம் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகளவில் பிரபலமான தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான், ட்விட்டர், பேஸ்புக், அலிபாபா போன்றவை கடந்த ஒரு வருடமாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன.
இதற்கு உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் இறங்க உள்ளது.
அதன்படி மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் மனிதவளம், பொறியியல் உட்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ப்ளூம்பெர்க் நியூஸ் வெளியிட்ட செய்தியில், மைக்ரோசாப்மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவில் மட்டும் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த பணிநீக்க நடவடிக்கை குறித்து இதுவரை மைக்ரோசாப்ட் தரப்பில் எந்த கருத்தும் கூறப்படவில்லை. அதே நேரத்தில் மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஜூன் 30ம் தேதி நிலவரப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 2,21,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் 1,22,000 பேர் அமெரிக்காவிலும், 99,000 பேர் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிளை நிறுவனங்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கு முன்னதாக கடந்த ஜூலை மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் மட்டும் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
பின்னர், அக்டோபர் மாதம் பல பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 1,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என ஆக்சியோ அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
துறவியாக மாறிய பெரும் வைர வியாபாரியின் 9 வயது மகள்!
சரவெடி… அதிரடி… இரட்டை சதம்! : சுப்மன் கில் படைத்த சாதனைகளின் முழுப் பட்டியல்