கல்லணையை கட்டிய கரிகால சோழன் புகழை உலகம் போற்றும் வகையில், பசுமையும் பரதமும் என்ற பெயரில் ஆயிரம் நாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி கல்லணையில் இன்று (அக்டோபர் 2) நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்லணை, டெல்டா மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.
கர்நாடகாவிலிருந்து வரக்கூடிய காவிரி நீர் மேட்டூர் அணை மற்றும் திருச்சி முக்கொம்பு அணையை கடந்து கல்லணைக்கு வந்து சேரும்.
கல்லணையிலிருந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு விவசாயத்திற்காக காவிரி நீரானது செல்கிறது.
2000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே, நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்த காலத்தில் கல்லணையை கரிகால சோழன் திறம்பட கட்டியுள்ளார்.
கல்லணையை கட்டிய கரிகால சோழன், காவிரி நீர், விவசாயம் இவற்றை பெருமைப்படுத்தும் விதமாக தமிழக பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கல்லணையில் பசுமையும் பரதமும் நாட்டியாஞ்சலி மற்றும் ஜெட்லி உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு முழுவதும் 60-க்கும் மேற்பட்ட நாட்டிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள், நாட்டிய கலைஞர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கரிகால சோழன், காவிரி நீர், விவசாயத்தை போற்றும் வகையில் மூன்று பாடல்கள் இசைக்கப்பட்டது. இந்த பாடல்களுக்கு பரத நாட்டிய கலைஞர்கள் நடனம் ஆடினர்.
செல்வம்
குந்தவை, நந்தினியாக மாறிய நடிகைகள்!
புரட்டாசி மாதத்தில் காசிமேட்டில் மீன்கள் விற்பனை படு ஜோர்!