இங்கிலாந்தில் உள்ள 100 நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியக் குறைப்பு இல்லாமல் வாரத்தில் 4 நாட்கள் வேலைதிட்டத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன. அந்நாட்டு மக்கள் தங்கள் வேலைகளைப் பற்றி எப்படி சிந்திக்கிறார்கள் மற்றும் அணுகுகிறார்கள் என்பதை முற்றிலும் மாற்றுவதற்கான முதல் படியாக இத்திட்டம் பார்க்கப்படுகிறது.
ஐரோப்பியாவில் சில நாடுகள், ஊழியர்களிடம் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை வாங்கும் திட்டத்தை கொண்டுவந்து உள்ளன.
பணி நேரம் அதிகமாக இருப்பதால் ஊழியர்கள் சிரமத்தை களைய, அதேவேளையில் பணியும் பாதிக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன.
கடந்த ஜூன் மாதம் வாரத்தில் நான்கு நாட்கள் வேலைத்திட்டம் சோதனை முயற்சியில் இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தொடர்ந்து 6 மாதங்கள் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் சுமார் 3,300 ஊழியர்கள் பங்கேற்று பணியாற்றி வந்தனர். இதன் முடிவில் 88 சதவீத நிறுவனங்கள், இத்திட்டம் தங்கள் வணிகத்துக்கு சாதகமாக இருப்பதாக தெரிவித்தன.
15 சதவீதம் உற்பத்தித்திறன் உயர்ந்துள்ளதாகவும், மற்ற பணிகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தன.
இந்நிலையில் இங்கிலாந்தில் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்துக்கு,100 நிறுவனங்கள் கையொப்பமிட்டுள்ளன.
இந்த நிறுவனங்களில் சுமார் 2,600 பேர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரு நிறுவனங்களான அடாம் வங்கி மற்றும் உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஆவின் ஆகியவையும் 4 நாட்கள் வேலை திட்டத்துக்கு கையொப்பமிட்டுள்ளன.
இந்த 2 நிறுவனங்களிலும் தலா 450 ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இதுகுறித்து ஆவின் தலைமை நிர்வாகி ஆடம் ரோஸ் கூறியதாவது, ”இது நிறுவனத்தின் வரலாற்றில் நாங்கள் பார்த்த மிகவும் மாற்றத்தக்க முயற்சிகளில் ஒன்றாகும்.
கடந்த 1½ ஆண்டுகளில் ஊழியர்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வில் மிகப்பெரிய அதிகரிப்பை கண்டோம். அதே நேரத்தில் வாடிக்கையாளர் சேவை மற்றும் உறவுகளை, தக்க வைத்தல் ஆகியவற்றில் பெரும் பயன்கள் ஏற்பட்டன” என்றார்.
மேலும், யுகே பிரச்சார இயக்குனர் ஜோ ரைல், “ஊதிய பிடித்தம் இல்லாத நான்கு நாள் வேலை திட்டத்தை நாங்கள் பார்க்க விரும்புகிறோம்.
அடுத்த சில ஆண்டுகளில் இன்னும் பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கையெழுத்திட வைப்பதை இலக்காகக் கொண்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஜல்லிக்கட்டு வழக்கு: மீண்டும் இன்று விசாரணை!
எலான் மஸ்க் படுக்கையில் துப்பாக்கி: மிரட்டும் முயற்சியா?