பாட்டிக்காக கொள்ளையனுடன் சண்டை போட்ட 10 வயது சிறுமி!
தனது பாட்டியின் செயினை பறித்த கொள்ளையனுடன் 10 வயது சிறுமி துணிச்சலுடன் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சிவாஜி நகர் மாடல் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் 60 வயதான லதா காக்.
இவர் கடந்த மாதம் 25ம் தேதி இரவில் தனது 10 வயது பேத்தி ருத்வி காக் உடன் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஸ்கூட்டியில் வந்த கொள்ளையன், சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்த லதா காக் கழுத்தில் இருந்த செயினை பறித்து இழுத்துள்ளான்.
இதனால் தனது பாட்டி அலறியதை கண்ட அந்த சிறுமி ருத்வி, கொள்ளையனை எதிர்த்து, தனது கையில் இருந்த பையுடன் தைரியமாக சண்டை போட்டுள்ளார்.
ஆனால் அதையும் மீறி செயினை பறித்துக்கொண்டு கொள்ளையன் தப்பித்துவிட்டான்.
இந்த சம்பவம் தொடர்பாக லதா காக் சிவாஜி நகர் காவல் நிலையத்தில் நேற்று புகாரளித்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் கொள்ளையனுக்கு எதிராக துணிச்சலுடன் சிறுமி போராடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
சீமானை ஏன் கைது செய்யவில்லை? பீகாரில் இருந்து பிரஷாந்த் கிஷோர் கேள்வி!
காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் பதவி: இளங்கோவன் பதில்!