மழைக்காலங்களில் ஒரு நாளைக்கு இரண்டு கப்புக்கு மேல் காபி, டீ அருந்த வேண்டாம். காய்கறி சூப், க்ரீன் டீ ஆகியவற்றை அதிகம் அருந்தலாம்.
தினமும் இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். கொதிக்கவைத்து, ஆறவைத்த நீரைப் பயன்படுத்துவது சிறந்தது.
சிறுநீரை அடக்கக்கூடாது. சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தால் கண்டிப்பாக உடனே கழித்து விடவேண்டும். இது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க உதவும்.
அடிக்கடி வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது. மிதமான சூடுள்ள வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பது தொண்டைப் புண்கள் வராமல் தடுக்கும்.
சுற்றுப்புறங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குப்பைகளை அதற்கான தொட்டிகளில் கொட்டவேண்டும். பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றை வீட்டிலும் வீட்டின் அருகிலும் இருந்து அகற்றிவிடுங்கள்.
மழைக் காலங்களில் இயல்பாகவே உடலின் ஜீரண சக்தி குறைந்துவிடும். ஆகவே, கொழுப்பு நிறைந்த உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அதிக காரம், எண்ணெய் மற்றும் மசாலா கலந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
வீடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீர் தேங்கவிடக் கூடாது. வீட்டைச்சுற்றி அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் தூவுவதும் நல்லது.
காய்ச்சல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிலவேம்பு கஷாயம் குடிப்பது நல்லது. இது அரசு மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கிறது. கடைகளில் சூரணமாகவும் கிடைக்கிறது. அலோபதி மருந்துகள் உட்கொள்பவர்கள்கூட நிலவேம்பு கஷாயம் குடிக்கலாம்.
இருமல் வந்தால் பழுத்த தக்காளிப்பழத்தைப் பிசைந்து, நான்கைந்து வெள்ளைப்பூண்டுப் பற்களை நசுக்கிப்போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து உப்பு சேர்த்து அருந்தினால் இருமல் நிற்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுபஸ்ரீ
பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி உதடுகளில் வரும் கொப்புளங்கள்… காரணமும் தீர்வும்!
ஹெல்த் டிப்ஸ்: இனி நெய் சாப்பிடும் போது இந்த 3 விஷயங்களை மறந்துடாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கொழுக்கட்டை
கூட்டணி ஆட்சியிலிருந்து கூட்டாட்சிக்கு: முதலமைச்சரின் ‘போட்காஸ்ட்’ உரை குறித்து சில குறிப்புகள்!
2030 – க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு: ஸ்டாலின்