நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று (மே 13) அவரது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இயக்குநர் பரசுராம் பெட்லா இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிப்பில் கடந்த ஆண்டு மே 13 ஆம் தேதி சர்காரு வாரி பாட்டா படம் வெளியானது.

இந்த படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் ‘கலாவதி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ், 14 ரீல்ஸ் பிளஸ் மற்றும் மகேஷ் பாபு என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது.

எனவே நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று (மே 13) அதிகாலை 1 year of kalavathi என்ற கேப்ஷனுடன் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மோனிஷா