பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனுக்கு பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆகி வெளியேறி விட்டார். உடல் பருமன் காரணமாக அவரால் டாஸ்க்குகளை விளையாட முடியவில்லை. அதோடு, உட்கார்ந்தே இருக்கும் அவருக்கு தண்ணீர் முதல் கொண்டு மற்றவர்களே எடுத்து கொடுக்கும் நிலையும் இருந்தது.
பிக்பாஸ் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே சென்ற பிரபலம் என்றாலும் குறைவான வாக்குகளை பெற்று அவர் வெளியேறியுள்ளார். இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த ரவீந்தர் ஒரு ரிவ்யூவராக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியிருப்பதாவது, ”பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நான் நல்ல முயற்சிகள் எடுத்தேன். மிகவும் நேர்மையாகவும் சின்சியராகவும் இருந்தேன். உங்களுக்குள் சண்டை போட்டுகிட்டு எங்களையும் திட்டிட்டு இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ஓட்டினால் மற்றவர்களை ஜெயிக்க வச்சவங்களுக்கும் ஓட்டு போடாமல் எனக்கு அநியாயம் செய்தவர்களுக்கு நன்றி. என்னை விமர்சனம் செய்தவர்களுக்கும் கழுவி ஊத்துனவங்களுக்கும் நன்றி. இந்த உடம்பை வச்சுகிட்டு எப்படிங்க உள்ளே போனீங்கனு சிலர் என்கிட்ட கேட்டுகுறாங்க.
கடைசியா பிக்பாஸ்ல உங்களை வச்சு இப்படி செஞ்சுட்டாங்களேனும் சிலர் கேட்குறாங்க. ஆமாங்க, நாம செஞ்ச சம்பவங்கள் அப்படி. அதுலாம் நம்மையும் திருப்பி தாக்குமா… இல்லையா? அதனால , அது ஒன்றும் தப்பில்லை. யானைனா ஒருத்தரால நம்மளை அடக்கிட முடியாது. யானையை அடக்கனும்னா 10 பேரு வேணும்ல. ஆடுனது கொம்பன் இல்ல கும்கி. அதுதான், அங்க நடந்தது. பிக்பாஸ்ல என்னை பற்றிய நிறைய பேருடைய ரிவ்யூவ்சை பார்த்தேன்.
ஜோ மைக்கேல், ஷனம் ஷெட்டி , ப்ளு சட்டை, வனிதாக்கா, ஜேம்ஸ் வசந்த், அபிநயாக்கா உள்ளிட்ட விமர்சகர்களுக்கு எல்லாமே நான் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்காக ஃபேன் பேஜூம் தொடங்கிருக்காங்க. இதுக்கெல்லாம் நான் அப்படி என்ன கழற்றினேனு தெரியல. அவங்களுக்குல்லாம் ரொம்பவே நன்றி.
உள்ளே மெண்டலாகவும் வெளியே பிசிக்கலாகவும் இருந்த எனது மனைவி மகாலட்சுமிக்கும் என்ன செய்ய போறேனு தெரியல. உள்ளே நான் நல்லாருக்கனும்னு நினைச்ச அவ்வளவு பேருக்கும் நன்றி. நான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த அன்றைக்குதான் என்னோட அப்பாவுக்கு ஒபன் ஹார்ட் சர்ஜரி நடந்தது. நான் ஆபரேசன் தியேட்டர்ல அவரை பார்த்துட்டு உள்ளே போயிட்டேன். அவரு டிஸ்சார்ஜ் ஆகி வருறதுக்குள்ள என்னை சார்ஜ் பண்ணி பிக்பாஸ்ல இருந்து அனுப்பிட்டாங்க. அப்புறம் 7 நாள் கழிச்சுதான் என்னோட அப்பாவை வந்து பார்த்தேன் என்று கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கைவிடப்பட்ட பங்கருக்குள் கிடந்த படுக்கை, ஏ.கே.47 … இஸ்ரேல் ராணுவம் நடத்தியஅதிரடி!