மோடி காட்டும் தேசிய கொடி: அப்டேட் குமாரு

டிரெண்டிங்

நண்பர் ஒருத்தர்கிட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பத்தி பேசிட்ருந்தேன்.

“உலக கோப்பை இறுதி போட்டிய பார்க்குதற்கு பிரதமர் மோடி போறாராமேனு” கேட்டேன்…

“ஆமா…எப்படி சந்திரயான் 3-க்கு தேசிய கொடி காட்டுனாரோ…அதே போல இந்திய அணி ஜெயிச்சதும் மோடி தேசிய கொடி காட்டுவாருனு” சொன்னாப்ல…

“பாரத அணி கண்டிப்பா ஜெயிக்கும் நண்பானு” சொல்லிட்டு வந்துட்டேன்…

Mannar & company
மனைவிக்கு உப்புமா ஆயுதமாகும்போது,
கணவனுக்கு ஹோட்டல்கள் கேடயமாகின்றன!
#உப்புமா

 

 

ArulrajArun
குழந்தைகளுடன் விளையாடிய பிரதமர் மோடி
குழந்தையோடு மட்டுமா விளையாடினார் ஓட்டு போட்ட தண்டத்துக்கு மக்களோடு வாழ்க்கையிலும் தான் விளையாடுராரே

ℳsd ❝இதயவன்❞

இந்தியாவின் நீண்ட நாள் கவலைக்குரிய விஷயம் காலிஸ்தான் பிரிவினைவாதம் ~ வெளியுறவு துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்
தேர்தல் நெருங்கும் போது காலிஸ்தான் அப்படியே பாகிஸ்தானா மாறும் இல்லடா?!

Kirachand
உலக கோப்பை இறுதி ஆட்டம் காண வருகிறார் பிரதமர் மோடி…
அப்போ…”ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்… ஜெய் ஸ்ரீராம்”னு கோஷம் விண்ணைப் பொளக்கும்னு சொல்லு…

மயக்குநன்
எனது 3-வது முறை பதவிக் காலத்தின்போது உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 3-ம் இடத்துக்கு முன்னேறும்!- பிரதமர் மோடி.
அப்புறம் ஏன் முதல் முறை பதவிக் காலத்தின்போது முதலாம் இடத்துக்கு முன்னேறலை..?!

ArulrajArun
என்ன ரொம்ப புடிச்சிருக்கு
யாருக்கு மாப்ள என் பொண்ணுக்கா
உங்க பொண்ணுக்கா ஜலதோஷத்துக்கு மாமா

கோழியின் கிறுக்கல்!!

வாழ்க்கைல வருத்தப்படும் அளவுக்கு விடயங்கள் செய்வதெல்லாம்,
திருமணம் வரை மட்டுமே!!

லாக் ஆப் 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சிப்காட் போராட்டம்: விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ரத்து!

Election2023: ம.பி, சத்தீஸ்கர்: மதியம் வரை வாக்கு சதவிகிதம் எவ்வளவு?

+1
1
+1
8
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *