மழை பெய்ஞ்சுக்கிட்டிருக்கு… மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்னு நியூஸ்ல சொல்லிக்கிட்டிருக்காங்க.
வீட்ல உட்கார்ந்துக்கிட்டிருந்த சின்ன பையன், ‘ஏம்ப்பா… ஒவ்வொரு வாட்டியும் நியூஸ்ல மீனவர்கள் கடலுக்கு போகவேணாம்னு சொல்றாங்களே….
அதுமாதிரி, மாணவர்கள் ஸ்கூலுக்கு போக வேணாம்னு ஏன் சொல்ல மாட்டேங்குறாங்க?’னு வாயாலயே என்னை டேக் பண்ணிவிட்டான்.
நியூஸ் சேனல் தலைவருங்களா வானிலை ஆராய்ச்சி மையத்துக்கிட்ட கேள்வி கேட்டு இந்த மாணவ பிரதிநிதியோட கோரிக்கையை நிறைவேத்தி வைங்கப்பா…
நீங்க அப்டேட் பாருங்க
Dr. M. A. N. Loganathan
மிஸ்டர் ஆறுமுகசாமி… விசாரணைக் கமிஷன் வெச்சு ஆசை தீர ஆற அமர விசாரிச்சு என்ன முடிவு பண்ணீங்க?
மறுபடியும் சில பேர்களிடம் விசாரணை நடத்த சொல்லிருக்கேன் சார். அந்த விசாரணைக்கப்பறம்?
இன்னும் பல பேர்களிடம் விசாரணை நடத்தச் சொல்லுவேன்.
ரஹீம் கஸ்ஸாலி
வசூல் ராஜா ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
துணை முதல்வரா இருந்த ஓ.பி.எஸ். வசூல் ராஜா என்றால், முதல்வரா இருந்த ஈ.பி.எஸ். வசூல் மகாராஜாவா?
ச ப் பா ணி
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பது ஆப்போசிட் சிக்னலில் பச்சை விழுவதுதான்
ஊர்க்காவலன்
ஒன்பது கோளும் ஒன்றாய் காண
ஸ்பேசுக்கு போகணுமா
அதான் இல்ல பிள்ளையார் பட்டி வரவேண்டும்..
சபரிஸ்
அம்மாவுக்கும் மனைவிக்குமுள்ள வித்தியாசம்
தெரியாம தடுக்கி விழுந்துட்டா பதறுனா அது அம்மா
கண்ணு என்ன பொடனிலயா வச்சிருக்கனு கேட்டா அது மனைவி…
ச ப் பா ணி
நீ பார்க்காத பார்வைக்கொரு நன்றி
-ட்ராபிக் போலீஸ்
கோழியின் கிறுக்கல்!
அண்ணே நான் உலகத்திலேயே பெரிய பணக்காரன் ஆகணும், அதுக்கு என்ன பண்ணனும்?
முதல்ல எல்லா பேங்க்லயும் கோடிக் கணக்கில கடன் வாங்கணும்!!
ஊர்க்காவலன்
இருட்டுது மழை பெய்யுது வெயில் அடிக்குது… ரிப்பீட்டு
லாக் அஃப்