திருநெல்வேலி பெட்ரோல் பங்க்கில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 21 பைசா வசூலித்ததற்கு அபராதமாக ரூ.7000 விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மேலகருங்குளம் அசோகபுரம் தெருவைச் சார்ந்த லெனின். இவர் கடந்த 07.10.2019 அன்று வண்ணாரபேட்டை பெட்ரோல் பங்கில் தனது இருசக்கர வாகனத்திற்கு ரூ.100-க்கு பெட்ரோல் போட்டுள்ளார். அன்றைய தேதியில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.77. 51 பைசா என நிர்வாகம் வசூல் செய்துள்ளது. ஆனால் அன்றைய தேதியில் பெட்ரோல் விலை ரூ.77.35 பைசா இருந்துள்ளது. லெனினிடம் கூடுதலாக 21 பைசா வசூல் செய்துள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 21 பைசா வசூல் செய்திருப்பது முறையற்ற வாணிபம் என லெனின் தெரிவித்துள்ளார். மேலும் 21 பைசாவை திரும்பத் தருமாறு கேட்டதற்கு பெட்ரோல் பங்க் நிர்வாகம் 21 பைசாவை தர மறுத்து விட்டார்கள்.
இதனால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் லெனின் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையத் தலைவர் கிளாஸ்ட் டோன் பிளசிங் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மனுதாரருக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு பெட்ரோல் பங்க் நிர்வாகம் ரூ.7000 நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
ரஜினிகாந்த் கருத்தை வரவேற்ற அன்புமணி
காட்டுத்தீ: சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை!