அதிமுக தொண்டர்களை மாதிரி சாமர்த்தியசாலியோ, பொறுமைசாலியோ இந்த உலகத்துலயே இருந்ததில்லை. எப்படினு கேக்குறீங்களா…
ராயப்பேட்டை கலவரத்தப் பத்தி அத வச்சி நடக்குற கேஸ் பத்தி ஒரு எம்ஜிஆர் வெறியர்கிட்டே கேட்டேன்.
‘ரெட்டை இலையில ஒரு இலை பன்னீர், ஒரு இலை எடப்பாடினு யாரோ ஒரு புண்ணியவான் சொன்னான். இப்ப ரெட்டை இலையை ஆளுக்கு ஒரு இலையா பிய்ச்சுக்கிட்டு போகப் போறாங்க.
அதேமாதிரி அதிமுக தலைமை அலுவலகத்தோட வாசலுக்கு ரெண்டு கேட் மாதிரி பாதுகாப்பா நிக்கிறாங்கனு யாரோ அன்னிக்கு சொன்னாங்க. இன்னிக்கு என்னடான்னா ஒரு கேட் பன்னீர், ஒரு கேட் எடப்பாடினு மாறிப் போச்சுய்யா.
இலையோ, கதவோ எல்லாமே ஆளுக்கு ஒண்ணு எம்ஜிஆர் வாயில பன்னு’னு டைமிங்ல ரைமிங்கா சொல்றாரு…
நீங்க அப்டேட் பாருங்க.
amudu
ஜூலை 11 நடந்த வன்முறை தொடர்பாக தடயங்கள், ஆதாரங்களை அதிமுக தலைமை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு.
எப்போ நடந்த வன்முறைக்கு, இப்போ போய் தடயத்தையும், ஆதாரத்தையும் தேடினால், அதை அவங்க கல்வெட்டில் செதுக்கி வைத்து விட்டு போயிருப்பாங்களோ
ச ப் பா ணி
ஒரு முழம் மல்லிகை ரூ.150; முல்லை, ரூ.100! மிரள வைக்கும் பூக்களின் விலை
ஒவ்வொரு பூக்களுமே.. சொல்கிறதே.. விலை அதிகம் என்று
balebalu
சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் அபராதம்
கேமிரா மூலம் விதிமுறைகள் மீறப்பட்டால் கண்டுபிடிக்க முடியும் : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி –
குண்டும் குழியுமான தரமற்ற சாலைகள் கேமிரா மூலம் கண்ணுக்கு தெரிஞ்சா அபராதம் உண்டா ஆபீசர் ?
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
வெற்றியை பாராட்ட தவறும் நண்பர்களை விட, பொறாமை மூலம் அங்கீகரிக்கும் எதிரிகளே மேல்..
balebalu
ஒரு முழம் மல்லிகை ரூ.150; முல்லை, ரூ.100 – செய்தி
இனிமே பூ வைக்குற இடத்துல தான் பொன் வைக்கணும் போல
Mannar & company
சொத்தை விட்டுட்டு வெளிநாடு கூட போயிட்டு வத்துடலாம் போல,
சொந்த மொபைல் போனை விட்டுட்டு #வாக்கிங் கூட போயிட்டு வர முடியலை!
பரமசிவம் ராமசாமி
ஒவ்வொரு ” சும்மாதான்” என்பதற்கு பின்னால், சொல்ல விரும்பாத விசயமும்..
ஒவ்வொரு, ” ஒண்ணுமில்லே” என்பதற்கு பின்னால் வலி நிறைந்த உண்மையும் உள்ளது…
ச ப் பா ணி
அறையை விட்டு கிளம்பும்போது பாடி ஸ்பிரே
அறையின் உள்ளே வரும்போது
ரூம் ஸ்பிரே
-பேச்சிலர்
ஊர்க்காவலன்
உலகில் சாதாரண மனிதர்கள் ‘சாம்பல்’ ஆகிறார்கள்..
சரித்திர மனிதர்கள் ‘சாம்பிள்’ ஆகிறார்கள்..!
amudu
பணவீக்கத்தை கட்டுப்படுத்த தெரியாமல் மத்திய அரசு தடுமாறிக் கொண்டிருக்கிறது. -ப.சிதம்பரம்.
பாஜகவுக்கு தாவும் காங்கிரஸ் தலைவர்களை கட்டுப்படுத்த தெரியாமல் உங்க கட்சி தடுமாறுவது போலவா.
லாக் ஆஃப்
பத்து எம்.எல்.ஏ. பேசுறாங்கன்னா 60 எம்.எல்.ஏ. பேசுறதில்லையா?: அப்டேட் குமாரு
மின்னம்பலம் என்ன ஆச்சு அப்பேட் குமாருக்கு?
நான் அவரோட ரசிகன்.