வினேஷ் போகத் 100 கிராம் எடை கூடுனதுனால தகுதி நீக்கம் பண்ணது ரொம்ப வருத்தம்னு ஆலமரத்தடில அமாவாசை பேசிட்டு இருந்தான்
அதே நேரத்துல ஆவின் பால் பாக்கெட்டுலயும் அப்பப்போ 100 மிலி பால் குறையுறதா புகார் வருதே என்ன பண்ணலாம்னு கேட்டேன்…
பதில காணோம்னு ஆள பாத்தா… ஆளயே காணோம்… போயிட்டான்..
நீங்க அப்டேட்ஸ் பாருங்க
✒️Writer SJB✒️
ஒலிம்பிக்கில் நம் நாட்டுக்கு பதக்கம் வாங்கித் தருபவர் தேசபக்தர் என்றால்
அந்த பதக்கம் நம் நாட்டுக்கு கிடைக்காமல் தடுத்தவர்கள் தேச துரோகிகள் தானே..?
Dr. M. A. N. Loganathan
இந்திக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிகம் திணிக்கப்பட்டது
சாய்பாபாதான்
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
லைப்ல ஒரே ஒரு ஆசை தான் மாமா எனக்கு. ஒரு மளிகை கடை வைச்சு..
சொல்லு மாப்ள.. கடையை சூப்பர் மார்க்கெட் அளவுக்கு பெருசு படுத்தனுமா?
அதெல்லாம் இல்ல மாமா.. கடைக்கு SBI எம்ப்ளாயி எவனாவது மளிகை சாமான் வாங்க வரும் போது லஞ்ச் டைம்னு சொல்லி கடையை சாத்திட்டு கிளம்பிறனும்
Kirachand
நல்லவேளை நான் ஒலிம்பிக் போட்டில கலந்துக்கிடல மாமா!
ஏன் மாப்ள அப்படி சொல்ற?
நேத்த விட இன்னைக்கு 100கிராம் எடை கூடிட்டேன் மாமா!
chandru
கை நிறைய சம்பளம் வாங்கினாலும்
கல்யாணம் ஆன பிறகு கடுகளவாத்தான் தெரியுது!
இம்சை
ட்ரெயின், பஸ்ஸில் மனிதன் பயணிக்க ஆரம்பித்ததில் இருந்தே
இட ஒதுக்கீடு பிரச்சனை ஆரம்பிச்சிடுச்சி!
பயாஸ்
ஏன்ணே அவனை அடிக்கிறீங்க?
ஆடி ஆஃபர்ல ஒரு சட்டைக்கு மூணு சட்டை இலவசமா கொடுக்கிறாங்களே,
அப்படின்னா…அவங்களுக்கு எத்தனை சட்டை ஆஃபர்ல கிடைச்சிருக்கும்ன்னு கேட்கிறாம்பா!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
டிஜிட்டல் திண்ணை: அதிமுகவின் பெண்கள் வாக்கு வங்கி… கைப்பற்றிய ஸ்டாலின்… அதிர்ச்சியில் எடப்பாடி
வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி : மோடி, ராகுல் வாழ்த்து… பரிசு அறிவிப்பு!