டிக் டாக் புகழ் ஜிபி முத்துவுடன் அதிவேகமாக பைக்கில் பயணம் செய்த டிடிஎஃப் வாசன் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி மதுக்கரை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்னுடைய பைக் வீடியோக்கள் மூலம் 2k கிட்ஸ்களுக்கு மிகவும் நெருக்கமானவர் டிடிஎஃப் வாசன். அண்மையில் இவர் தனது பிறந்த நாளின் போது, ரசிகர்களை சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
அப்போது யார் இந்த டிடிஎஃப் வாசன் என இணையமே அவர் குறித்து தேடியது.
டிடிஎஃப் வாசன் Twin Throttlers என்ற தனது யூடியுப் சேனலில் பைக் சாகச வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அந்தவகையில், செப்டம்பர் 18-ஆம் தேதி டிக்டாக் புகழ் ஜிபி முத்துவுடன் சாகச பயணம் மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டார்.
கோவை பாலக்காடு சாலையில் டிடிஎஃப் வாசன் பைக்கில் 150 கி.மீ வேகத்தில் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த ஜி.பி.முத்து அலறிய அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த சம்பவம் குறித்து மன்னிப்பு வீடியோ ஒன்றை டிடிஎஃப் வாசன் வெளியிட்டிருந்தார். அதில் தான் இனி இதுபோன்று வேகமாக இருசக்கர வாகனத்தை இயக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் மீது கோவை போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அஜாக்கிரதையாகவும் உயிர்க்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்குப் பதியப்பட்டது.
இந்நிலையில் நேற்று (செப்டம்பர் 26) டிடிஎஃப்.வாசன் மதுக்கரை நீதிமன்றத்தில் காலை சரணடைந்தார். டிடிஎஃப் வாசனுக்கு ஆதரவாக, இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்தனர்.
இதனால் மாலையில் டிடிஎஃப் வாசன் விடுவிக்கப்பட்டார். டிடிஎஃப் வாசன் கைது செய்யப்படலாம் என்று இணையத்தில் பேசப்பட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
செல்வம்
தொடரும் மன்கட் சர்ச்சை…. மீண்டாரா தீப்தி சர்மா? எம்சிசி சொல்வது என்ன?
மீண்டும் பிஎஃப்ஐ தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!