அதிகாரியை பார்த்து நாய்போல் குரைத்த நபர்!

டிரெண்டிங்

ரேஷன் கார்டில் தவறாக இடம்பெற்ற பெயரை மாற்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபர் நாய் போல் குரைத்து கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்தி தத்தா. இவரது பெயருக்கு பின் இடம் பெற்றிருக்கும் குடும்பப் பெயர் ரேஷன் கார்டில் தவறாகப் பதிவாகியுள்ளது.

தத்தா என்பதற்குப் பதில் குட்டா என்று இடம்பெற்றுள்ளது. குட்டா என்றால் இந்தியில் நாய் என்று பொருள்.

இந்த பெயரை மாற்றக் கோரிக்கை வைத்துச் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் ஸ்ரீகாந்தி தத்தா மனு கொடுத்தும் பலனில்லை.

இந்நிலையில், நேற்று ஸ்ரீகாந்தி வசிக்கும் பகுதிக்கு உள்ளூர் தொகுதி மேம்பாட்டு அதிகாரி வந்த போது, அவரிடம் தனது கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்.

அப்போது வினோதமாக நாய் போன்று குரைத்து தனது கோரிக்கையைத் தெரிவித்துள்ளார்.

அவரது செயலால் ஒன்றும் புரியாமல் பார்த்த அந்த அதிகாரி மனுவை வாங்கிப் படித்துவிட்டு, பெயரை மாற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து ஸ்ரீகாந்தி தத்தா கூறுகையில், “தத்தா என்பதற்குப் பதிலாகக் குட்டா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மாற்ற மூன்று முறை விண்ணப்பித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

என்னைப் போன்ற எளிய மக்கள் எத்தனை முறை தான் வேலையை விட்டுவிட்டு விண்ணப்பித்துக் கொண்டே இருக்க முடியும். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இவ்வாறு செய்தேன்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீகாந்தி தத்தா நாய் போல் குரைக்கும் காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா

திகார் சிறையா, மசாஜ் பார்லரா?: ஆம் ஆத்மி அமைச்சரின் வீடியோ!

ஆட்சியும் மழையும் : மு.க.ஸ்டாலின் கலகல பேச்சு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.