தான் ‘பெரிய பாய்’ என ரசிகர்களால் அழைக்கப்படுவதை விரும்பவில்லை என இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். ar rahman rejecting the nick name of periya bhai
தமிழ்திரையுலகில் 1992ஆம் ஆண்டு வெளியான ரோஜா படம் மூலம் இசைத் தென்றலாக அறிமுகமானார் ஏ.ஆர். ரகுமான்.
அதன்பின்னர் பல்வேறு படங்களில் தனது இசையால் இன்றளவும் கவர்ந்து வரும் ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் அவருக்கு “இசை புயல்”, “மெட்ராஸின் மொஸார்ட்”, “இசை மேஸ்ட்ரோ” மற்றும் “ஆஸ்கார் நாயகன்” என பல்வேறு பெயர்களில் அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.
எனினும் சமீபகாலமாக சமூகவலைதளங்களில் அவரை ரசிகர்கள் செல்லமாக ‘பெரிய பாய்’ என அழைத்து வருகின்றனர். இந்நிலையில் தான் இவ்வாறு அழைக்கப்படுவதை விரும்பவில்லை என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் திரைப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் இப்படம் தொடர்பான நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ரகுமானை, நிகழ்ச்சியின் தொகுப்பாளினி டிடி ’பெரிய பாய்’ என்ற புனைப்பெயருடன் அழைத்தார்.
அப்போது, “பெரிய பாயா? வேணாம் அது எனக்கு புடிக்கல. அது என்ன சின்ன பாய், பெரிய பாய்னு. நான் என்ன கசாப்பு கடையா வெச்சிருக்கேன்? இந்த பெயர் பிடிக்கவில்லை” என தொகுப்பாளினியிடம் கூறினார். இதுதொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
