பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த ‘வந்தே மாதரம்’ வீடியோவை பகிர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பக்கத்தில் அதன் தமிழ் வரிகளை பதிவிட்டுள்ளார்.
ஆஸ்கர் நாயகனான பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் தமிழ் மொழிப்பற்று அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒருமுறை அதனை அவர் நிரூபித்துள்ளார்.
ராணுவ வீரர்களுடன் பிரதமர்!
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன்படி இந்த ஆண்டும் கார்கில் சென்ற பிரதமர் மோடி, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். பின்னர் அங்கிருந்த ராணுவ வீரர்களுடன் மகிழ்ச்சி உரையாடிய பிரதமர் மோடி, ராணுவ தளவாடங்களையும் பார்வையிட்டார்.
அப்போது ராணுவ வீரர்கள், பிரதமர் மோடி முன்பு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலின் இந்தி வெர்சனை பாடினர்.
இதனை ரசித்துக்கேட்ட பிரதமர் மோடி, அதனை தனது ட்விட்டர் பக்கத்தில், ”கார்கிலில் உற்சாகமான தீபாவளி!” என்று ராணுவ வீரர்கள் பாடிய வீடியோவையும் பதிவிட்டார்.
தாய் மண்ணே வணக்கம்!
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ”இதயம் இதயம் துடிக்கின்றதே எங்கும் உன்போல் பாசம் இல்லை ஆதலால் உன் மடி தேடினேன் தாய் மண்ணே வணக்கம்” என வந்தே மாதரம் பாடலின் தமிழ் வரிகளைப் பகிர்ந்து தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அவரது ரசிகர்கள் பலரும் ஏ.ஆர்.ரகுமானின் தமிழ்பற்றை பெருமையுடன் பகிர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழிலும் பாடல் வீடியோ!
இந்நிலையில் எல்லையில் இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்களை தமிழ் மொழியில் பாடக் கேட்டு அவர்களுக்கு இனிப்பும் ஊட்டியுள்ளார்.
அதன்படி தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் சூராங்கனி பாடலை அவர் முன் குழுவாக பாடியுள்ளனர்.
இதனை தனது ட்விட்டர் பகிர்ந்த பிரதமர் மோடி, ”தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கிரிக்கெட் உலகின் அசைக்க முடியாத அரசன்… யார் இந்த விராட் கோலி?
”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்
