மீண்டும் ‘பேட்ட ரேப்’ கூட்டணி: ரகுமானுடன் இணையும் பிரபு தேவா

Published On:

| By Selvam

மனோஜ் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படத்திற்கு ‘மூன் வாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

90-களில் பிரபு தேவா நடித்த ‘காதலன்’, ‘லவ் பேர்ட்ஸ்’, ‘மின்சார கனவு’, ‘விஐபி’, ‘காதலா காதலா’, ‘வானத்தை போல’ உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் அடித்தன. குறிப்பாக பிரபு தேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணியில் உருவான பாடல்களை இன்றளவும் ரசித்து கேட்கும் ரசிகர் பட்டாளங்கள் இருக்கிறார்கள்.

1994-ல் ஷங்கர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பேட்ட ரேப்’ பாடல் கல்லூரி விழாக்களிலும், பேருந்து பயணங்களிலும் இளைஞர்களால் அதிகமுறை கேட்கப்பட்ட பாடலாக ஒலித்தது.

இந்தநிலையில், 2000-க்கு பிறகு பிரபுதேவாவுக்கு தமிழில் சரியான படங்கள் அமையவில்லை. நீண்ட கால இடைவெளிக்கு பிறகு 2016-ஆம் ஆண்டு ‘தேவி’ படத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து ‘குலேபகாவலி’, ‘மெர்க்குரி’, ‘லக்‌ஷ்மி’, ‘சார்லி சாப்ளின் 2’, ‘தேவி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், 27 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா – ஏ.ஆர்.ரகுமான் கூட்டணி இணைய இருப்பதாக வந்திருக்கும் அப்டேட்டால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் மனோஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு ‘மூன் வாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரயில் பயணிகளின் எமன் மோடி : சசிகாந்த் செந்தில்

கள்ளச்சாராய விற்பனை: ஐந்து பேர் உயிரிழந்த விவகாரம்… சாராய வியாபாரி கைது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share