இயக்குநர் மணி ரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் 38 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த படத்தில் கமலுடன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ar rahman penned song for trisha as sugar baby
இந்த படத்தின் முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. கல்யாண கொண்டாட்டம் பின்னணியில் துள்ளலான இசையில் வெளியான இப்பாடலுக்கு பலரும் ரீல்ஸ் செய்து தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு டிரெண்ட் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து இன்று (மே 21) படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சுகர் பேபி என்ற பெயரில் நாயகி த்ரிஷாவுக்காக உருவான தனிப்பாடலாக இருக்கும் என ப்ரொமோ வீடியோ காட்டியது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி சுகர் பேபி பாடல் லிரிக் வீடியோ இன்று மாலை 5 மணிக்கு வெளியானது.
பாடலின் தொடக்கத்தில் திடீரென நடிகை த்ரிஷா ரெக்கார்டிங் ரூமில் நின்றுக் கொண்டு பாட்டுப் பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
அதனைக் கண்டு த்ரிஷா சொந்தக் குரலில் பாடியிருக்கிறாரா என ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர். எனினும் பாடலை அலெக்ஸாண்ட்ரா ஜாய், சுபா, சரத் சந்தோஷ் உள்ளிட்டோர் தான் பாடியுள்ளனர்.

மேலும் டிரெய்லரைத் தொடர்ந்து சுகர் பேபியிலும் த்ரிஷாவுடன் கமல்ஹாசன் கொஞ்சுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
”என்ன வேணும் உனக்கு.. கொட்டிக் கொட்டி கிடக்கு” எனத் தொடங்கும் இந்த பாடலை சிவ ஆனந்த் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் எழுதியுள்ளனர்.
இதற்கிடையே வரும் மே 24ம் தேதி தக் லைஃப் படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அப்போது படத்தின் மற்ற பாடல்களும் வெளியாக உள்ளது.
