ஏ.ஆர்.ரகுமான் ஹெல்த் ரிப்போர்ட்… அப்பல்லோ அப்டேட்!

Published On:

| By Selvam

லண்டனில் இருந்து நேற்று (மார்ச் 15) சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமான், இன்று (மார்ச் 16) காலை நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சைகள் முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். Rahman discharged from apollo

இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர். Rahman discharged from apollo

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share