ஏப்ரல் 19 மக்களவைத் தேர்தலா?

Published On:

| By Kavi

April 19 Lok Sabha Election fact check

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் என குறிப்பிட்டு ஒரு அறிவிப்பு இணையத்தில் பரவி வருகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான 17ஆவது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. இதனால் வரும் ஏப்ரல் மாதம் பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இதைமுன்னிட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் அறிக்கை தயாரித்தல், வேட்பாளர் தேர்வு என அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

ஏற்கனவே பாஜக 195 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. காங்கிரஸ் இன்று 39 பேர் கொண்ட முதல்கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது.

தேர்தல் தேதி இன்னும் ஒருவாரத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பாக்கப்படும் நேற்று முதல் ட்விட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது போல் ஒரு அறிவிப்பு பரவி வருகிறது.

அதில், “2024 பொதுத் தேர்தல் விவரங்கள்… 28.03.2024 வேட்புமனு தாக்கல், 19.04.2024 -வாக்குப்பதிவு நாள், 22.05.2024 -வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு, 30.05-2024 புது அரசு பதவி ஏற்பு” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று(மார்ச் 8) இந்த தகவலை மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், ‘போலியான செய்தி பரவி வருகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தேர்தல் அட்டவணையை செய்தியாளர் சந்திப்பு மூலம் அறிவிக்கப்படும்” என்று கூறியுள்ளது.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Dhanush : தனுஷின் ‘குபேரா’ கதை இதுதானா?

IPL 2024: ஒரு அணிக்கு எதிராக அதிக ‘டக்-அவுட்’ ஆன வீரர்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share