டிகிரி முடிச்சவரா நீங்க? யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை… மாதம் ரூ.15,000 சம்பளம்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Apprentice vacancies in United India insurance

“கல்லூரி முடிச்சுட்டு வேலை தேடிட்டு இருக்கேன்… ஒரு நல்ல கவர்மெண்ட் கம்பெனியில எக்ஸ்பீரியன்ஸ் கிடைச்சா நல்லா இருக்குமே” என்று நினைக்கும் இளைஞர்களுக்கு, சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் (UIIC) நிறுவனம் ஒரு சூப்பர் வாய்ப்பை வழங்கியுள்ளது.

வங்கி மற்றும் இன்சூரன்ஸ் துறையில் நுழையத் துடிக்கும் பட்டதாரிகளுக்காக, ‘அப்ரண்டிஸ்’ (Apprentice) எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 153 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

வேலை என்ன?

இது ஒரு வருடப் பயிற்சிப் பணி. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அலுவலகச் செயல்பாடுகள், பாலிசி நடைமுறைகள், வாடிக்கையாளர் சேவை போன்றவற்றை நேரடியாகக் கற்றுக்கொள்ளலாம். இது நிரந்தரப் பணி இல்லை என்றாலும், பொதுத்துறை நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம் (Experience Certificate) உங்கள் பயோடேட்டாவிற்குத் தனி வெயிட்டேஜ் கொடுக்கும்!

ADVERTISEMENT

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், வணிகவியல் என ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
  • வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 30 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். (எஸ்சி/எஸ்டி/ஒபிசி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).

சம்பளம் (உதவித்தொகை):

ADVERTISEMENT

பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும்.

  • மெட்ரோ நகரங்களில் பணிபுரிபவர்களுக்கு மாதம் ரூ.15,000 வரை உதவித்தொகை கிடைக்கும். மற்ற நகரங்களில் ரூ.12,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் அவர்களின் பட்டப்படிப்பு மதிப்பெண்கள் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் (Merit List) தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. சில சமயங்களில் எளிய நேர்காணல் அல்லது சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் இருக்கும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விருப்பமுள்ளவர்கள் மத்திய அரசின் NATS போர்ட்டல் (nats.education.gov.in) வழியாகவோ அல்லது www.uiic.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படியோ விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி:

விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் கடைசித் தேதி மற்றும் விரிவான விவரங்களை இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் (Notification) படித்துத் தெரிந்துகொள்ளவும். காலக்கெடு முடிவதற்குள் விண்ணப்பிப்பது நல்லது.

சும்மா வீட்ல இருக்கறதுக்கு, இந்த மாதிரி ஒரு பொதுத்துறை நிறுவனத்துல ஒரு வருஷம் வேலை பார்த்தா, கைக்குக் காசும் ஆச்சு… கத்துக்குட்டி மாதிரி இன்சூரன்ஸ் தொழிலைக் கத்துக்கவும் ஆச்சு! நாளைக்கே வேறொரு பெரிய இன்சூரன்ஸ் கம்பெனியில ஈஸியா வேலை வாங்க இந்த சர்டிபிகேட் உதவும். மிஸ் பண்ணிடாதீங்க பாஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share