கோவையை கலக்கப்போகும் பெண் நடத்துநர்கள்!

Published On:

| By Kavi

கோவை கோட்டத்தில் 22 பெண் நடத்துனர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் சிவசங்கர் இன்று (ஏப்ரல் 12)  வழங்கினார்.  Appointment order for 22 female conductors

கோயம்புத்தூர் சுங்கம் கிளை-1 அரசு போக்குவரத்து கழக பணிமனையில், கோயம்பத்தூர் கோட்ட போக்குவரத்துக் கழகத்தில் பணியின் போது இறந்த 44 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கள் வழங்கினார்.  இதில் 22 பேர் பெண்கள் ஆவர். 

இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சிவசங்கர்,  “பொங்கல் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை கூட கொண்டாடாமல் போக்குவரத்து ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.  போக்குவரத்து கழக ஊழியர்களின் உழைப்பால் 19 விருதுகளை போக்குவரத்து கழகம் பெற்றுள்ளது” என்று புகழாராம் சூட்டினார். 

மேலும் அவர்,  “போக்குவரத்து கழகத்தில்  2000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.1000 பேருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்படுகிறது.  புதிய பேருந்துகளை படிபடியாக உயர்த்தி  இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து கழகம் புத்துயிர் பெற்றிருக்கிறது. அரசு போக்குவரத்து கழகம் தனியார் மயமாக்கப்படும் என்ற தகவல் முற்றிலும் தவறானது” என்று கூறினார். 

பெண்களுக்கு பணி நியமன ஆணை வழங்கியது குறித்து பேசிய அமைச்சர் சிவசங்கர்,  “முதல்வரின் நடவடிக்கையால் தற்போது பெண்களுக்கு நடத்துநர்களாக போக்குவரத்து துறையில் பணியில் சேர்ந்து வருகின்றனர்.  முதலில் பெண்களை போக்குவரத்து துறையில் பணியமர்த்தும் போது  உயர பிரச்சினை ஏற்பட்டது. 

இதனால் முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு 10 சென்டி மீட்டர் உயரத்தை குறைத்து அவர்களும் பணியில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு வழங்கினார். இதுபோன்று போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  பொதுத்துறை நிறுவனமாகவே செயல்படும்” என்று தெரிவித்தார். Appointment order for 22 female conductors

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share