யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published On:

| By Kavi

யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் அளித்து மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் உத்தரவிட்டுள்ளது. application for UPSC Prelims exam extended

நம் நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.

இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.இந்த ஆண்டு நடைபெற இருக்கும் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தொடக்கத்தில் பிப்ரவரி 11ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு பின்னர் பிப்ரவரி 18 (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

தற்போது இரண்டாவது முறையாக பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 6 மணி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 28 வரை விண்ணப்பதாரர்கள் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் 979 பணியிடங்களுக்கு மே 25-ம் தேதி யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1,056 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு 979 ஆக குறைக்கப்பட்டுள்ளது. தேர்வு தொடர்பான அறிவிப்பு upsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 22-ம் தேதி முதல் ஐந்து நாட்கள் முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படும் என யுபிஎஸ்சி தகவல் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share