ADVERTISEMENT

“எங்க ரூல்ஸ் வேற… உங்க ஆப்லாம் இன்ஸ்டால் பண்ண முடியாது!” – இந்திய அரசின் உத்தரவை நிராகரித்த ஆப்பிள்!

Published On:

| By Santhosh Raj Saravanan

apple refuses india order to preload sanchar saathi app privacy concerns

“எல்லா புது போன்களிலும் ‘சஞ்சார் சாதி’ ஆப் இருக்கணும்” என்று இந்திய அரசு போட்ட உத்தரவை, உலகின் மிகப்பெரிய டெக் நிறுவனமான ஆப்பிள் (Apple) துணிச்சலாக எதிர்த்துள்ளது. “இது தனிநபர் பாதுகாப்பிற்கு ஆபத்து” என்று கூறி, இந்த உத்தரவை ஏற்க மறுத்துவிட்டது ஆப்பிள்.

ADVERTISEMENT

சஞ்சார் சாதி (Sanchar Saathi) விவகாரம் இப்போது ஆப்பிள் vs இந்திய அரசு என்ற மோதலாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

என்ன உத்தரவு? சைபர் மோசடிகளைத் தடுக்கவும், தொலைந்து போன போன்களைக் கண்டுபிடிக்கவும் மத்திய அரசு கொண்டு வந்ததுதான் ‘சஞ்சார் சாதி’. கடந்த நவம்பர் 28-ம் தேதி, மத்திய தொலைத்தொடர்புத் துறை (DoT) ஒரு ரகசிய உத்தரவைப் பிறப்பித்தது.

  • ஆப்பிள், சாம்சங், சியோமி உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும், இந்தியாவில் விற்கும் தங்கள் புதிய போன்களில் சஞ்சார் சாதிசெயலியை முன்கூட்டியே இன்ஸ்டால் (Pre-install) செய்து விற்க வேண்டும்.
  • இதை வாடிக்கையாளர்கள் டிசேபிள் (Disable) செய்ய முடியாதபடி அமைக்க வேண்டும்.
  • ஏற்கனவே விற்பனைக்கு வந்த போன்களுக்கும் சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த ஆப்-ஐ திணிக்க வேண்டும். இதற்கு 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

ஆப்பிள் சொன்ன அதிரடி பதில்! இந்த உத்தரவு வெளியானவுடன் மற்ற நிறுவனங்கள் அமைதியாக யோசிக்க, ஆப்பிள் நிறுவனம் மட்டும் “முடியவே முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஆப்பிள் தரப்பு கூறியுள்ள காரணங்கள்:

ADVERTISEMENT
  1. பிரைவசி முக்கியம் (Privacy Risks): “எங்கள் ஐபோன்களில் (iOS) இது போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை (Third-party apps) முன்கூட்டியே இன்ஸ்டால் செய்வது, எங்கள் பாதுகாப்பு கட்டமைப்பையே உடைப்பதற்கு சமம். இது வாடிக்கையாளர்களின் தனிநபர் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும்.”
  2. உலகத்துல எங்கயும் இல்ல: “உலகில் எந்த நாட்டிலும் நாங்கள் அரசின் செயலியை போனில் இன்ஸ்டால் செய்து விற்பதில்லை. இந்தியாவிலும் அதைச் செய்ய மாட்டோம்.”
  3. செக்யூரிட்டி சிக்கல்: “இந்த ஆப் மூலம் ஹேக்கர்கள் ஊடுருவ வாய்ப்பு உள்ளது. எங்கள் ஆப் ஸ்டோர் விதிகள் இதை அனுமதிக்காது.”

அரசியல் சர்ச்சை: இந்த விவகாரம் அரசியலாகவும் வெடித்துள்ளது. காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால், “Big Brother Cannot Watch Us” (பெரிய அண்ணன் நம்மைக் கண்காணிக்கிறார்) என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “இது மக்களை உளவு பார்க்கும் முயற்சி” என்று எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன.

அமைச்சர் விளக்கம்: சர்ச்சை வெடித்ததும், அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, “இந்த ஆப் பாதுகாப்பிற்காகத் தானே தவிர, வேவு பார்க்க அல்ல. இது ஆப்ஷனல் (Optional) தான். வேண்டாம் என்றால் மக்கள் டெலீட் செய்யலாம்” என்று கூறிச் சமாளிக்க முயன்றுள்ளார். ஆனால், “அப்பறம் ஏன் முன்கூட்டியே இன்ஸ்டால் பண்ணச் சொல்லி கம்பெனிகளை மிரட்டணும்?” என்ற கேள்விக்கு அரசிடம் பதிலில்லை.

ADVERTISEMENT

சாம்சங் என்ன சொல்கிறது? ஆப்பிள் கறாராக மறுத்துவிட்ட நிலையில், ஆண்ட்ராய்டு நிறுவனங்களான சாம்சங் மற்றும் சியோமி ஆகியவை அரசின் உத்தரவை எப்படிச் சமாளிப்பது என்று ஆலோசித்து வருகின்றன. கூகுளின் ஆண்ட்ராய்டு சிஸ்டம் சற்று தாராளமானது (Open Source) என்பதால், அவர்களுக்கு இது பெரிய சிக்கலாக இருக்காது. ஆனால், ஆப்பிளின் பிடிவாதம் அரசுக்கு ஒரு பெரிய தலைவலியை உண்டாக்கியுள்ளது.

மொத்தத்தில் “நீங்க என்ன வேணாலும் சொல்லுங்க, எங்க கஸ்டமர் பிரைவசி தான் எங்களுக்கு முக்கியம்” என்று ஆப்பிள் காட்டும் கெத்து, டெக் உலகில் பாராட்டுகளைப் பெற்றாலும், இந்திய அரசு இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்பதுதான் தற்போதைய ‘ஹாட்’ டாபிக்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share