பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு- அதிமுகவிலிருந்து அன்வர் ராஜா அதிரடி நீக்கம்!

Published On:

| By Mathi

Anwar Raja Expelled from AIADMK

அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அன்வர் ராஜா, அக்கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

அதிமுக- பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்து பேட்டியளித்திருந்தார் அன்வர் ராஜா. இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அன்வர் ராஜா இணைய இருப்பதாக ஊடக தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

இந்த நிலையில் அன்வர் ராஜா, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share