ட்வெண்டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் இரவு கொல்கத்தா ஈடன் கார்டனின் நடந்த ஆட்டத்தில், இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இதில் துணை கேப்டன் விராட் கோலி, 55 ரன்கள் எடுத்து வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இதைத்தொடர்ந்து பொதுமக்கள், பாலிவுட் நடிகர்கள் அமிதாப், ஷாரூக், ப்ரீத்தி ஜிந்தா, அபிஷேக் பச்சன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதைத் தொடர்ந்து சிறிது நாட்களுக்கு முன்னர் விராட் கோலியுடன் காதலை முறித்துக்கொண்ட பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, டி-20 ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்காக கோலிக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
தான் தயாரிக்கும் படங்களின் கதைக் களத்திலும், சமூகம் தொடர்பான பார்வையிலும், மனிதர்களின் சுயமரியாதை உணர்வு குறித்து பண்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருபவர் அனுஷ்கா சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
