இலங்கை அதிபராக பதவியேற்றார் அனுர குமார திசநாயக்

Published On:

| By Kavi

இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக் இன்று (செப்டம்பர் 23) பதவி ஏற்றார்.

இலங்கை அதிபர் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தேர்தல் முடிந்த நிலையில் உடனே வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.

இதன் முடிவில் தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் அனுர குமார திசநாயக் 55 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.

44% வாக்குகளுடன் சஜித் பிரேமதாச இரண்டாம் இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை ரணில் விக்ரமசிங்கவும், நான்காவது இடத்தை நமல் ராஜபக்சவும், 5வது இடத்தை தமிழர்களின் பொது வேட்பாளரான அரியநேந்திரன் பாக்கியசெல்வமும் பிடித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை இலங்கையின் ஒன்பதாவது அதிபராக  அனுர குமார திசநாயக்  பதவியேற்றார்.

கொழும்பில் உள்ள அதிபா் செயலகத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி ஜெயனந்த ஜெயசூர்யா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய அனுர குமார திசநாயக், “எனக்கு வாக்களித்த மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையிலும் பணியாற்றுவேன்” என்று உறுதியளித்தார்.
இலங்கையின் புதிய அதிபருக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைதள பதிவில், “இந்தியாவின் அண்டை நாடுகளில் பாலிசி மற்றும் விஷன் சாகர் ஆகியவற்றில் இலங்கை சிறப்பு இடம் பெற்றுள்ளது. இந்திய மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக எமது பன்முக ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், உங்களுடன் நெருக்கமாக பணியாற்றவும் ஆவலாக உள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மோடிக்கு நன்றி தெரிவித்து அனுர குமார திசநாயக் தனது எக்ஸ் பக்கத்தில்,  “ உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் ஆதரவிற்கும் நன்றி. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான உங்கள் உறுதிப்பாட்டை நான் பகிர்ந்து கொள்கிறேன்.

நமது மக்கள் மற்றும் முழு பிராந்தியத்தின் நலனுக்காக ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் நாம் ஒன்றாக பணியாற்றலாம்” என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

மனைவி, குழந்தைகளை தவிக்கவிடுபவர் நல்ல மனிதரா? – யாரை சொல்கிறார் நடிகை குஷ்பூ

வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஷாக்… ரூ.60,000-ஐ நெருங்கிய தங்கம் விலை.!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share