கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் அனுபமா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனுபமாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில், அனுபமா தனது அடுத்த படமான ’பரதா’ என்ற படத்தின் கான்செப்ட் வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
சினிமா பண்டி என்ற படத்தின் மூலம் உலக சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் பிரவீன் கந்த்ரேகுலா தான் தற்போது அனுபமா நடித்துள்ள பரதா படத்தை இயக்கியுள்ளார்.
ஆனந்தா மீடியா பேனரில் விஜய் டான்கடா, ஸ்ரீனிவாசலு, ஸ்ரீதர் மகுவா ஆகியோர் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பரதா படத்தின் கான்செப்ட் வீடியோவில், ஒரு கிராமப்புறத்தில் உள்ள அம்மனின் சிலை காட்டப்படுகிறது, அதனைத் தொடர்ந்து அடுத்த காட்சியில் பல பெண்கள் தங்களது சேலையின் முந்தானையால் முக்காடு போட்டுக்கொண்டு தங்களது முகத்தை மறைத்துக் கொண்டிருக்க அத்தனை பெண்களுக்கு மத்தியில் அனுபமாவின் சேலை முந்தானை மட்டும் விலகி அவரது முகம் தெரிவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் இணைந்து தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் சங்கீதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கூடிய விரைவில் இந்த படத்தின் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் வெளியான தில்லு ஸ்கொயர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் செம ஹிட் அடித்ததால் தற்போது அனுபமா தனது சம்பளத்தை ரூ. 1.20 கோடியாக உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
– கார்த்திக் ராஜா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
“குரங்கு பெடல்” ஃபர்ஸ்ட் சிங்கிள்: ஸ்பெஷல் என்ன?
கிச்சன் கீர்த்தனா: பாவ் பாஜி தோசை ரோல்
டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்… ஸ்டாலின் மனசில் இருப்பது என்ன?