லைகா தயாரிப்பில் அனுபமாவின் புது பட டைட்டில் இதோ..!

Published On:

| By Minnambalam Login1

பிரேமம், கொடி, கார்த்திகேயா 2 போன்ற படங்களின் மூலம் திரையுலகில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடா என பல மொழிகளில் அனுபமா நடிப்பில் வெளியான திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வருகிறார் அனுபமா.

கடைசியாக தமிழில் இவரது நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனுபமாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இந்நிலையில், இன்று (மே 6) லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிப்பில் அனுபமா நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

AR ஜீவா இயக்கியுள்ள இந்த படத்திற்கு “லாக் டவுன்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் ஆக்ரோஷமாக கத்துவது போல் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

லாக் டவுன் காலக்கட்டத்தை மையமாகக் கொண்ட ஒரு த்ரில்லர் படமாக இந்த லாக் டவுன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுந்தரபாண்டியன், நீர்பறவை போன்ற படங்களுக்கு இசையமைத்த என். ஆர். ரகுநந்தன் மற்றும் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ஜுங்கா போன்ற படங்களுக்கு இசையமைத்த சித்தார்த் விபின் ஆகிய இருவரும் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.

கூடிய விரைவில் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிளஸ் 2 ரிசல்ட்: வெற்றி பெற்ற திருநங்கை மாணவி!

பிளஸ் டூ ஃபெயிலா? கவலைப்படாதே சகோதரா… உனக்கும் ‘கவுன்சிலிங்’ உண்டு!

திடீரென சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை… காரணம் இதுதான்… அவரே வெளியிட்ட பதிவு..!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share