தமிழ்நாடு சட்டமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றி அனுப்பிய, நீட் தேர்வு விலக்கு சட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டதாக சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 4) முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். Anti-NEET Bill Rejected CM Stalin what next
கேள்வி நேரம் முடிந்ததும் முதலமைச்சர் ஒரு அறிவிப்பை இன்று வெளியிட்டார்.
”2006 ஆம் ஆண்டில் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில் பட்ட படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்து, பள்ளிகளில் 12 ஆண்டுகள் பயிலக் கூடிய பள்ளிக்கல்வி மதிப்பெண்களின் அடிப்படையில் சமூக நீதியும் அனைத்து பிரிவு மாணவர்களுக்கு சம வாய்ப்பையும் உறுதி செய்யக்கூடிய முன்னோடி சேர்க்கை முறையை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கினார்.
சமூக நீதியை நிலைநாட்டி கிராமப்புறங்களில் வாழக்கூடிய ஏழை மாணவர்களின் மருத்துவ கல்வி கனவை நனவாக்க கூடிய இந்த முறையால் தான் மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பலனாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறோம். Anti-NEET Bill Rejected CM Stalin
ஆனால் நீட் தேர்வு முறை செயல்படுத்தப்பட்ட பின்னர் இந்த தேர்விற்கான பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தேர்ச்சி பெற இயலாத கிராமப்புற மாணவர்களுக்கும் ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. மாநிலத்தின் கிராமப் பகுதிகளிலும் பின்தங்கிய பகுதிகளிலும் வழங்கப்படும் மருத்துவ சேவைகளையும் எதிர்காலத்தில் இந்த முறை பாதிக்கும்.
நீட் தேர்வானது பயிற்சி வகுப்புகளுக்குச் செல்லும் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது என்பதிலும் இந்த தேர்வு அடிப்படையில் சமூக நீதிக்கு எதிரானதாக உள்ளது என்பதிலும் தமிழ்நாட்டு மக்கள், அரசியல் கட்சிகள், சமூக சிந்தனையாளர்கள் என அனைவரிடமும் உள்ள கருத்து ஒற்றுமையின் அடிப்படையில் சரியான மாற்று மருத்துவ மாணவர் சேர்க்கை முறை குறித்து பரிந்துரைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் திரு ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு உயர்நிலை குழுவினை இந்த அரசு அமைத்தது.
அந்த குழுவில் பரிந்துரை அடிப்படையில் இந்த சட்டமன்ற பேரவையில் 13- 9-2021 அன்று தமிழ்நாடு மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்டம் 2021 என்ற சட்ட முன்வடிவு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டும், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகும் மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் வழங்கப்படாமல் மறுபரிசீலனை செய்திட திருப்பி அனுப்பப்பட்டது.

இந்நிலையில் என் தலைமையில் 5- 2-22 அன்று அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு இந்த சட்ட முன்வடிவினை மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், அறிமுகப்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதன் பின் 8-2-2022 அன்று சட்டமுன்வடிவு மீண்டும் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்டடு. ஆளுநர் மூலமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இது குறித்து ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை, ஆயுஷ் துறை, உள்துறை, உயர்கல்வி துறை என பல்வேறு அமைச்சகங்கள் கோரிய அனைத்து விளக்கங்களுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இவற்றையெல்லாம் ஏற்காமல் நமது மாணவர்களுக்கு பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நமது நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதலை மறுத்துள்ளது என்ற வருந்தத்தக்க செய்தியை இந்த பேரவையில் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். Anti-NEET Bill Rejected CM Stalin what next
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றத்தின் மாண்பினை அவமதித்துள்ள ஒன்றிய அரசின் இத்தகைய எதேச்சதிகாரப் போக்கு அரசமைப்பு சட்ட அமைப்பு தந்துள்ள கூட்டாட்சி வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம். தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களையும் இந்த பேரவையின் தீர்மானங்களையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவே இல்லை. இதனை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஒன்றிய அரசு நமது கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வு முறை அகற்றுவதற்கான நமது போராட்டம் எந்த வகையிலும் முடிந்துவிடவில்லை என்பதையும், இந்த போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்டவல்லுநர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்படும்.
மேலும் இது தொடர்பாக அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் ஒன்பதாம் தேதி அன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடத்தப்பட உள்ளது. அதில் நமது சட்டமன்ற கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தங்கள் வாயிலாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி கனவோடு கல்வி பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சார்பாக அவர்கள் கனவை நினைவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கை எடுக்கும் என்பதை இந்த பேரவை வாயிலாக நான் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். Anti-NEET Bill Rejected CM Stalin what next