உள்ளத்தை அள்ளித் தா படத்தில் வரும் அழகியா லைலா பாடலை போல சிறுமியான அன்ஷா பாடி இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
இந்த பாட்டுதான் இப்போது, இன்ஸ்டாகிராமில் செம ஹிட்டடித்துள்ளது.
பலர் ஏனோதானோவென்று இன்ஸ்டாகிராமில் அலைந்து திரிந்தாலும், சிலரே தங்கள் நடன திறமை, பாட்டு திறமையை காட்டி , ஆக்கப்பூர்வமான முறையில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இதனால் நல்ல வாய்ப்புகளும் கிடைத்துள்ளன.
டி.இமான் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் பலரை அடையாளம் கண்டு தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுத்து சினிமா பாடகர்களாக உயர்த்தியுள்ளனர்.
தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் அன்ஷா ஷாகீரும் அப்படிப்பட்ட திறமை கொண்டவர்தான். கேரள மாநிலம், மலபுரத்தைச் சேர்ந்த அன்ஷா ஷாகீர் மிகச்சிறந்த குரல் வளத்துடன் பாடிய அழகிய லைலா பாடல் தற்போது சமூகவலைதளங்களில் கலக்கி வருகிறது.
உள்ளத்தை அள்ளித்தா படம் வெளியான போது, கார்த்திக்கின் துள்ளல் நடனம், ரம்பாவின் நடன அசைவுகள் காரணமாக அந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவியது.
அதே போலவே, அன்ஷா பாடி கலக்க, பாடலை கேட்ட பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, குறிப்பிட்ட சிலர் அந்தப் சிறுமியை மத ரீதியாக அவரது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்களில் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
குறிப்பிட்ட மதத்தில் பாடுவது ஹாரம், உனக்கு நரகத்தில் தான் இடம் கிடைக்கும்” என்று சிலர் சாடியுள்ளனர்.
அவரது குடும்பத்தினரையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர். அதே வேளையில் பலரும் அன்ஷாவுக்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் ரசிகர்கள் பெருகியுள்ளது.
தங்களுக்கு பிடித்த பாடலை பாட வேண்டுமென அவர்கள் அன்ஷாவிடத்தில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அழகிய லைலா பாடலை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் ராயன் படத்தில் ‘வாட்டர் பாக்கெட்’ பாடலை பாடி வெளியிட்டுள்ளார். அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது வரை 12.6 ஆயிரம் லைக்குகளை வாங்கியுள்ளது.
இதுமட்டுமின்றி ‘எண்ணமே ஏன் உன்னால’, ‘கண்ணோடு காண்பதெல்லாம்’, ‘கண்மணி அன்போடு காதலன்’ உள்ளிட்ட பல தமிழ் பாடல்களை பாடி வெளியிட்டுள்ளார் அன்ஷா.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
கூடுதல் திரைகளில் டிமான்டி காலனி 2 !
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்: அரசு விளக்கம்… போராட்டம் தொடரும் – எடப்பாடி திட்டவட்டம்!