ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகளில் இன்று இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மீண்டும் மோதுகின்றன.
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் ஏ பிரிவில் உள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் பி பிரிவில் உள்ள இலங்கை, வங்கதேசம் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அணிகள் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். இதில் டாப் 2 இடங்களைப் பெறும் அணிகளே இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும்.
சூப்பர் 4-வது சுற்றின் 2வது ஆட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏ பிரிவில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை இந்தியா பந்தாடி இருக்கிறது. இந்த தோல்விக்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் அணி இன்று விளையாடக் கூடும்.
ஆனால் பாகிஸ்தானை தொடர்ந்து வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இந்தியா அணி தீவிரமாக உள்ளது. இதனால் இன்று இரவு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி ‘இன்னொரு யுத்தம்’ போல இருக்கும் என்பது கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
