நடப்பு ஆண்டில் 40 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். announcements for government employees in budget
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு ஊழியர்களுக்காக வெளியிட்ட அறிவிப்பில்,
“மாநிலத்தில் உள்ள தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் வெவ்வேறு அரசுத் துறைகளிலுள்ள காலிப் பணியிடங்களுக்காக இதுவரை 57,016 அரசுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
40,000 பேருக்கு வேலை
இது தவிர, பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 21,866 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். ஆக மொத்தம் இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 78,882 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40,000 பணியிடங்களை நடப்பு நிதி ஆண்டிலேயே நிரப்பும் பொருட்டு உரிய நடவடிக்கைகளை அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அரசு அலுவலர்களுக்கு குறைந்த வாடகையிலான குடியிருப்புகளின் தேவை அதிகரித்து வருவதை நிறைவு செய்யும் வகையில், சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் 110 கோடி ரூபாய் செலவில், இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் 190 ‘C’ வகை குடியிருப்புகள் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் தங்களது ஊதியக் கணக்கைப் பராமரித்து வரும் தமிழ்நாட்டின் முக்கிய வங்கிகள், அரசு அலுவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கட்டணமின்றிப் பல சலுகைகளை அளித்திட முன்வந்துள்ளன.
அரசு அலுவலர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் இறந்து போனாலோ அல்லது விபத்தின் காரணமாக நிரந்தர ஊனம் அடைந்தாலோ தனி நபர் விபத்து காப்பீட்டுத் தொகையாக 1 கோடி ரூபாய் நிதியினை வழங்கிட வங்கிகள் முன்வந்துள்ளன.
விபத்தில் இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் உள்ள திருமண வயதை எட்டியுள்ள மகள்களின் திருமணச் செலவுகளுக்காக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் 10 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வங்கிகள் வழங்கிடும்.
விபத்து காரணமாக இறந்த அரசு அலுவலரின் குடும்பத்தில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரியில் உயர்கல்வி பயின்றிடும் மகளின் உயர் கல்விக்கான உதவித்தொகையாக 10 லட்சம் ரூபாய் வரை வங்கிகள் வழங்கிடும்.
அரசு அலுவலர்கள் தங்களது பணிக்காலத்தில் எதிர்பாராமல் இயற்கை மரணம் அடைந்தால் ஆயுள் காப்பீட்டுத் தொகையாக 10 லட்சம் ரூபாய் வங்கிகள் வழங்கிடும்.
தனிநபர் வங்கிக் கடன். வீட்டுக் கடன் கல்விக் கடன் ஆகியவற்றை அரசு அலுவலர்கள் பெறும் போது உரிய வட்டிச் சலுகைகள் வழங்கிடவும் முக்கிய வங்கிகள் முன்வந்துள்ளன.
அரசு அலுவலர்களுக்கு இந்தக் காப்பீடு உள்ளிட்ட சேவைகளை எதிர்வரும் 2025-26 ஆம் நிதியாண்டு முதல் வழங்கிட முன்வரும் வங்கிகளுடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதுடன், குறித்த காலத்திற்குள் இப்பயன்கள் அரசு அலுவலரின் குடும்பங்களுக்குக் கிடைத்திடுவதை தமிழ்நாடு அரசின் கருவூலத் துறை ஒருங்கிணைக்கும்.
அரசு நிர்வாக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் பொதுமக்கள் இணைய வழியிலேயே அரசு சேவைகளை விரைவாகவும் எளிமையுடனும் பெற்றிடுவதற்காகத் தொடங்கப்பட்ட எளிமையான நிர்வாகம் (Simple Gov) எனும் திட்டத்தின் கீழ், எட்டு அரசுத் துறையின் சான்றிதழ்கள் மற்றும் வழிமுறைகள் மிகவும் ஆவணங்கள் எளிமையாக்கப்பட பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
விரைவில் அரசாணைannouncements for government employees in budget
வரும் ஆண்டில், பல்வேறு துறைகளில், 150 சேவைகளை இணையவழியில் இம்முயற்சியின் கீழ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், வணிக நடைமுறைகளை எளிமையாக்குவதன் மூலம் தொழிற்துறை வளர்ச்சிக்கு உதவிட தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வெள்ளை வகை தொழிற்சாலைகளின் பட்டியலை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
அரசு அலுவலர்கள் இணையவழியில் தங்களுடைய திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில், முன்னணி கல்வி நிறுவனங்கள் வாயிலாக அவர்களுடைய விருப்பத்தின் பெயரில் கட்டணமின்றிப் பயின்றிட தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாக சான்றிதழ் பெறக்கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். செய்யறிவு, பெருந்தரவுப் பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை, தகவல் தொடர்புத் திறன் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்றும் கூறினார். announcements for government employees in budget