‘எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்’ – அண்ணாமலை திட்டவட்டம்!

Published On:

| By Minnambalam Desk

annmalai accept that eps is cm candidate

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அமித்ஷா ஏற்கனவே அறிவித்து விட்டார் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். annmalai accept that eps is cm candidate

கோவையில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமைலை நேற்று (ஜூலை 23) செய்தியாளர்களை சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது, ”தமிழகத்தில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் பாடத்திட்டத்தில் இல்லை. பாடத்திட்டத்தில் உள்ள கேள்விகள் கேட்டால் மட்டுமே மாணவர்களின் திறமையை பரிசோதிக்க முடியும். மேலும் சில மையங்களில் தேர்வு முடிந்த பின் வினாத்தாள்கள் பாதுகாக்கப்பட்ட விதம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. சில இடங்களில் சீல் பிரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக சீல் வைக்கவில்லை” என்று குற்றம் சாட்டி உள்ளார்.

எதற்காக கருத்துக்கணிப்பு?

திமுக மீது மக்கள் மன்றத்தில் கோபம் உள்ளது. மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற எண்ணம் இருக்கிறது. 20 இடங்களில் வெற்றி பெறக்கூடிய திமுகவினர் எதற்காக கருத்துக்கணிப்பு செய்கின்றனர் என தெரியவில்லை.

ADVERTISEMENT

இதற்கு முன்பு திமுக சந்தித்த தோல்வி பற்றி தெரியும். ஒரே ஒருவர் ஜெயித்தார். இரண்டு பேர் ஜெயித்தார்கள் அது யார் என்று தெரியும். அது போன்ற மோசமான தோல்வியை திமுக இதற்கு முன்னர் பார்த்து இருக்கிறது. அதை நோக்கித்தான் இந்த தேர்தல் போகிறது.

வெளியில் வந்து கிராமத்தில் தங்கி மக்களிடம் பேசினாலே முதல்வருக்கு தெரியும். மருத்துவமனையில் இருக்கும் அவரைப் பற்றி காட்டமாக பேச விரும்பவில்லை. அவர் விரைவில் குணமடைந்து வரவேண்டும். என்னதான் சர்வே எடுத்தாலும் திமுக தோல்வி உறுதி” என்றார்.

ADVERTISEMENT

முதல்வர் வேட்பாளர் யார்?

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளராக பழனிசாமியை மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே அறிவித்துவிட்டார். அதில் எந்த குழப்பமும் இல்லை எதிர்க்கட்சியினர்தான் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. போலி கணக்குகள் அதிகம் உள்ளன. 2 கிராம ஊராட்சிகளில் கள ஆய்வு செய்து எப்படி முறைகேடு நடந்துள்ளது என மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம்.

மதுரையில் சொத்துவரி முறைகேடு கண்டறியப்பட்டது போல் சிறப்பு விசாரணை குழு அமைத்து மாநிலம் முழுவதும் விசாரிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் முறைகேடு செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறினால் திமுகவில் அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும். அவரது மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்” என பல குற்றச்சாட்டுகளை முன் வைத்ததார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share