பேரறிஞர் அண்ணா 116வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 15) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையடுத்து சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே அண்ணா சாலையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோருடன், அமைச்சர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் கனிமொழி, தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட திமுக எம்.பி.க்களும், திமுக எம்.எல்.ஏக்கள், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து வள்ளுவர் கோட்டம் மற்றும் அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Diamond League 2024: 1 செ.மீல் தங்கத்தை தவறவிட்ட நீரஜ் சோப்ரா
”சுயமரியாதை இல்லாத இடத்தில் நான் இருக்கமாட்டேன்” : மணிமேகலை அதிருப்தி!