சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை இப்போதைக்கு 4 முனை போட்டி உள்ளது. எடப்பாடி பழனிசாமி சொல்லிய 210 சட்ட தொகுதிகளில் வெல்வோம் என பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் , முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் கே.என். நேரு துறையில் முறைகேடுகள் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறோம். ஆனால் இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை. டிசம்பர் 3 ம் தேதி அமலாக்கத் துறை மீண்டும் ஒரு கடிதம் அனுப்பி இருக்கின்றனர். மத்திய அரசு பணத்தில் கட்டப்படும் திட்டங்களில் முறைகேடு நடந்து இருக்கிறது,1020 கோடி ரூபாய் ஊழல் என அமலாக்கத்துறை கடிதம் அனுப்பி இருக்கிறது. இதில் அதிர்ச்சியான விசயம் பார்ட்டி பன்ட் என்று கூறி 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை வசூல் செய்து இருக்கின்றனர் .
பொறியாளார் நியமனத்தில் 888 கோடி ரூபாய் வரை நடந்துள்ளது. இரண்டாவது ஊழலில் 7.5 முதல் 10 சதவீதம் வரை பணம் வாங்கி இருக்கின்றனர். இந்த பணம் துபாய்க்கு செல்கிறது என அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்த அமலாக்க துறை புகாரை எப்ஐஆர் ஆக பதிவு செய்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க முடியும். இப்போது ஊரக வளர்ச்சித் துறையில் பணி நியமனத்திலும் ஊழல் நடைபெற்று இருக்கிறது. அமைச்சர் நேரு துறை தொடர்ந்து முறைகேட்டில் சிக்கி வருகின்றது என குற்றம் சாட்டினார்
அதேபோல் SIR பட்டியலில் 12.5 சதவீத வாக்காளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது , 80 லட்சம் வாக்காளர் வரை நீக்கப்பட்டு இருக்கின்றனர் . 2026 தேர்தலை பொறுத்த வரை சுத்தமான தேர்தலாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
நீதிபதி சுவாமிநாதன் மீது இன்பீச்மென்ட் கொண்டு வந்து இருக்கின்றனர். சுவாமிநாதன் 75,000 வழக்குகளை தீர்த்து வைத்து இருக்கின்றார். நேர்மையானவர். இந்த இம்பீச்மென்ட் மோசனை 3 பேர் கொண்ட குழு விசாரிக்கும். பின்னர் நடக்கும் வாக்கெடுப்பில் இவர்களால் வெற்றி பெற முடியாது என தெரிவித்தார்.
கோவையில் ஓ.பி.எஸ் அவர்களை ஒரு விழாவில் சந்தித்து பேசி கொண்டோம். டிடிவி தினகரன் கோவை வந்த போது வீட்டிற்கு சாப்பிட அழைத்தேன் என்றார்.
மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக எடப்பாடி இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற வேண்டும், தேமுதிக, பா.ம.க வரும் போது வலிமையாக இருக்கும், இதை தலைவர்கள் பார்த்து கொள்வார்கள்.
இன்னமும் நிறைய வலிமையான கட்சிகள் வெளியில் இருக்கின்றன. வலிமையான தேசிய ஜனநாயக கூட்டணி இருக்க வேண்டும். அதிமுக பொதுக்குழுவில் அவர்கள் பேசுகின்றனர், அவர்கள் பேசுவதை தவறாக பார்க்கவில்லை, NDA என வரும் போது அதை வலிமைப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
அதிமுகவில் அவங்க தலைவர்கள் பேசுவதற்கு உரிமையுண்டு. அமித்ஷா விரைவில் வருவார், எப்போது வருவார் என்பதை மாநில தலைவர் சொல்லுவார் . எல்லோருடைய வலிமையான கருத்து தேசிய ஜனநாயக கூட்டணி வலிமை பெற வேண்டும். எங்கள் தேசிய தலைவர்களுடன் பூட்டிய அறையில் பேச எங்களுக்கு உரிமையுண்டு் , என்ன பேசினோம் என்பதை வெளியில் சொன்னால் சரியாக இருக்காது என்றார்.
பா.ஜ.க மாநில தலைவர் தோற்பார் என தவெக செங்கோட்டையன் பேசி இருப்பது குறித்த கேள்விக்கு, தனிப்பட்ட முறையில் செங்கோட்டையன் மென்மையானவர்,
அவர்களுக்கும் எங்கள் மாநில தலைவருக்கும் இடையே கருத்து போர் உள்ளது. அதனால் இதை அப்படியே விட்டு விடலாம் என்றார்.
மேலும் அடுத்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை இப்போதைக்கு 4 முனை போட்டி உள்ளது. 210 தொகுதிகள் வெல்வோம் என எடப்பாடி பழனிசாமி சொல்லியது போல் அந்த எண் நிச்சயம் வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
