கரும்புக்கான கொள்முதல் விலை உயர்வு: அண்ணாமலை வரவேற்பு!

Published On:

| By Selvam

annamalai welcomes sugarcane msp central government

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரும்புக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.315-ல் இருந்து ரூ.340-ஆக உயர்த்தப்பட்டது.

வரும் அக்டோபர் மாதம் துவங்கும் சர்க்கரை பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து சர்க்கரை ஆலைகள் கரும்புகளை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340-ஆக கொள்முதல் செய்ய உள்ளார்கள்.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 22) வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில்,

“மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், கரும்பு கொள்முதல் விலையை, குவிண்டாலுக்கு ரூ.315-லிருந்து, ரூ.340-ஆக உயர்த்தி அறிவித்துள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக கரும்பு விவசாயிகள் சார்பிலும் தமிழக பாஜக சார்பிலும்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்ந்து பல நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, விவசாயிகளின் நலன் காக்கும் உற்ற நண்பனாக நமது மத்திய அரசு விளங்கிக் கொண்டிருப்பதில், மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறோம்.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளில், கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்துவோம் என்று கூறி, ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும், இன்னும் நிறைவேற்றாமல் விவசாயிகளை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது.

உடனடியாக, திமுக, விவசாயிகளுக்குக் கொடுத்த தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கர்நாடகாவில் சிகரெட் விற்பனைக்குக் கட்டுப்பாடு:  ஹூக்கா பார்களுக்கு தடை! 

விவசாயிகள் போராட்டம் இரண்டு நாட்கள் நிறுத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share