சென்னை திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்ட்ரில் பாஜக சார்பில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ கருத்தரங்கு கூட்டம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இன்று (மே 26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட பதாகைகளில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் படங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக கூறி, இந்த கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்று அண்ணாமலை ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.
இதனால், பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்ச்சிக்காக முதலில், 2,000 நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. ஆனால், போதுமான அளவு கூட்டம் இல்லாமல் நாற்காலிகள் காலியாக இருந்ததால், 1,500 நாற்காலிகளை எடுத்துவிட்டு 500 நாற்காலிகள் மட்டுமே போடப்பட்டது.

கடந்த மே 22-ஆம் தேதி நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில், பாஜக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பாஜகவில் இனி வார் ரூம் அரசியல் இருக்கக்கூடாது, சோஷியல் மீடியா பதிவுகளை கண்காணிக்க குழு உருவாக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை ஆதரவாளர்களை நயினார் நாகேந்திரன் எச்சரித்திருந்தார். annamalai supporters boycott nainar nagendran
இதனால், நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையே உரசல் நீடித்தது. இந்தநிலையில், அண்ணாமலையின் புகைப்படத்தை தவிர்த்ததால், அவரது ஆதரவாளர்கள் கருத்தரங்கை புறக்கணித்துள்ளது பாஜகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. annamalai supporters boycott nainar nagendran