பாஜக தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணாமலை ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டுள்ளார். annamalai spritual tour like rajinikanth
கடந்த நான்கு வருடங்களாக தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை தற்போது தேசிய பொதுக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்ணாமலை தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அவர் ஆன்மீக பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.
இதற்காக நேற்று (ஏப்ரல் 13) சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அண்ணாமலை, அங்கிருந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சென்றார்.
அங்கு கேதர்நாத் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து தியானத்தில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

இந்த நிலையில் இமயமலையில் உள்ள பாபா கோயிலுக்கும் அண்ணாமலை சென்றுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை பாஜகவைச் சேர்ந்த வினோஜ் செல்வம் பகிர்ந்துள்ளார்.
அதில், அண்ணாமலை ஆன்மீக பயணம் மேற்கொள்வது மகிழ்ச்சி. மகாவதார பாபா அண்ணாமலையை ஆசிர்வதிப்பார். அண்ணாமலை காட்டும் பாபா முத்திரை என்னுள் இருக்கும் ரஜினி ரசிகரை தட்டி எழுப்புகிறது” என்று கூறியுள்ளார்.

வினோஜ் செல்வம் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் பாபா முத்திரையை காட்டியவாறு அண்ணாமலையுடன் இன்னொருவர் இருக்கிறார். அவர் வழக்கமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு செல்லும் போது அவருடன் செல்லும் நீண்ட கால நண்பர் ஹரி என்பது குறிப்பிடத்தக்கது. annamalai spritual tour like rajinikanth