ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பமாக உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று (மே 16) தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார். Annamalai says i dont want
பின்னர் செய்தியாளர்களை சந்த்தித்த அண்ணாமலையிடம், “தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம் என்று ஓ.பன்னீர் செல்வம் சொல்கிறாரே?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அண்ணாமலை, “ஓபிஎஸ் எப்போதும் எங்களுடன் தான் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இதயத்தில் ஒரு ஸ்பெஷல் ஸ்பேஸ் அவருக்கு இருக்கிறது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணியைப் பொறுத்தவரை வலுவாக இருக்கிறது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் தேவையில்லாத குழப்பத்தை விளைவிக்கிறார்கள்”என்றார்.
“தேசிய அளவில் உங்களுக்கு ஏதேனும் பதவி கொடுக்க வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்விக்கு, “இப்போது நான் நன்றாக இருக்கிறேன். ஆடு, மாடுகளை வைத்து விவசாயம் பார்க்கிறேன். கோவிலுக்கு செல்கிறேன். உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கட்சி தலைமை சொல்கிற பணிகளை செய்கிறேன். Annamalai says i dont want
மிகவும் நிம்மதியாக இருக்கிறேன். மக்கள் பணியை செய்து வருகிறேன். புத்தகம் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கிறது. குழந்தைகள், பெற்றோரோடு நிறைய நேரம் செலவிடுகிறேன்.
ஒரு தொண்டனாக பிரதமர் மோடிக்கு பணி செய்ய வேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய ஆசை பெரிது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்று நினைக்கக்கூடியவன். அதற்கான காலம் வரும். அதுவரை தொண்டனாக பணி செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
“உங்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கொடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறதே?” என்ற கேள்விக்கு, “எனக்கு எதற்கு அதிகாரம்? சாமானிய மனிதராக இருப்பதே ஒரு அதிகாரம் தான். எதற்காக என்னை கூண்டுக்குள் போட்டு அடைத்து வைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். நமக்கான காலம் வரும்போது பறக்க ஆரம்பிப்போம்” என்றார் அண்ணாமலை.