கூட்டணி பற்றி தேசிய தலைமைதான் முடிவு செய்யும் என்று டெல்லியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். annamalai ready to work as party cadre
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தைத் தொடர்ந்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் நேற்று டெல்லி சென்றார்.
கூட்டணிக்கான அவகாசம் நிறைய இருக்கிறது! annamalai ready to work as party cadre
இந்நிலையில் இன்று (மார்ச் 28) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துவிட்டேன். அதேபோல நட்டா, சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்தேன். தமிழக பாஜகவின் வளர்ச்சி பற்றி எடுத்துரைத்தேன். 2026 தேர்தலைப் பொறுத்தவரை முக்கியமான தேர்தல். நாங்கள் ஆளுங்கட்சி திமுகவை குற்றம் சுமத்துகிறோம். அதனால் எங்களைப் பொறுத்தவரை என்னைப் பொறுத்தவரை 2026 தமிழக மக்களின் நலனுக்கான தேர்தல். அப்படிப் பார்க்கும்போது கூட்டணிக்கான நேரம், காலம், அவகாசம் நிறைய இருக்கிறது.
கட்சி நலன் முக்கியம் என்பதை விட தமிழக மக்களின் நலன் முக்கியம். கட்சி வளர்ச்சியை விட மக்கள் நலன் முக்கியம். 2026 இல் திமுக ஆட்சியில் இருந்து இறக்கப்பட வேண்டும் என்பதே முதன்மையானது. 2026 திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான தேர்தல். எந்த ஓட்டும் வீணாகிவிடக் கூடாது.
எந்த பொறுப்பிலும் வேலை செய்யத் தயார்! annamalai ready to work as party cadre
நான் கூட்டணி பற்றி பேச அதிகாரம் உள்ளவன் கிடையாது. நான் கட்சியை வளர்க்கவே வேலை செய்கிறேன். கூட்டணிக்கு நான் யாரை விரும்புகிறேன் யாரை விரும்பவில்லை என்பதெல்லாம் இல்லை. தமிழ்நாடு மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். மிக விரைவில் மாநில தலைவர் தேர்தல் நடக்க இருக்கிறது.
நான் யாரோடும் மோதல் போக்கை பின்பற்றவில்லை. மாநில தலைவராக நான் கட்சியை பலப்படுத்த வேலை செய்தேன். அதேநேரம் கட்சியின் நலனை விட தமிழக மக்கள் நலன் முக்கியம், என்னைப் பொறுத்தவரை எந்த பொறுப்பிலும் வேலை செய்யத் தயார். தொண்டனாக வேலை செய்யவும் தயார். என்னால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. தலைவர் என்ற பதவியில் இருந்தால்தான் பணி செய்ய வேண்டும் என்று இல்லை” என்று கூறியிருக்கிறார் அண்ணாமலை.