அரசியல் விஞ்ஞானி: அண்ணாமலை கிண்டல்!

Published On:

| By Selvam

annamalai reacts sellur raju

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஜூலை 28-ஆம் தேதி முதல் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

ADVERTISEMENT

இந்தசூழலில் மதுரையில் நேற்று (ஆகஸ்ட் 3) செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “அண்ணாமலை தமிழக பாஜக தலைவர் அவ்வளவு தான். எங்களுக்கு மோடி, அமித்ஷா, நட்டா தான் முக்கியம். என்டிஏ கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மோடி அருகில் அமர வைத்தார். மோடிக்கு தெரியும் எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்கு தெரியவில்லை” என்று பேசியிருந்தார்.

செல்லூர் ராஜூவின் விமர்சனத்திற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை,

ADVERTISEMENT

“சில பேர் தங்களை அரசியல் விஞ்ஞானியாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கு பதில் சொல்லி என்னுடைய தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. நாங்கள் மக்களை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மக்கள் தான் எங்கள் எஜமானர்கள். எந்த தலைவருடைய அப்ரூவலும் எங்களுக்கு தேவையில்லை. மக்களுடைய அப்ரூவலும் ஆதரவும் போதும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அதிமுகவுக்கும் மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில் அண்ணாமலை நடைபயண துவக்க விழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவிர்த்திருந்தார்.

ADVERTISEMENT

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்க விழாவில் கலந்து கொண்டார். இந்தசூழலில் தான் அண்ணாமலை குறித்து செல்லூர் ராஜூ நேற்று விமர்சனம் செய்திருந்தார். செல்லூர் ராஜூவுக்கு அண்ணாமலை எதிர்வினையாற்றியிருப்பதன் மூலம் மீண்டும் அதிமுகவுக்கும் அண்ணாமலைக்குமான மோதல் போக்கு துவங்கியுள்ளது.

செல்வம்

உக்ரைன் துறைமுகம் மீது ரஷ்யா தாக்குதல்: 40,000 டன் தானியங்கள் சேதம்!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share