4 கோடி பறிமுதல்… அண்ணாமலை ரியாக்‌ஷன்!

Published On:

| By Selvam

நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்டது குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கமளித்த பிறகும் கூட அவரை சதி வலையில் சிக்க வைப்பதற்காக திமுக அரசியல் செய்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஏப்ரல் 8) குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தாம்பரம் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தனக்கு சம்பந்தமில்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விளக்கமளித்துள்ளார். இருப்பினும் அவரை சதி வலையில் சிக்க வைப்பதற்காக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் அரசியல் செய்கிறார்கள். தேர்தல் ஆணையம், பறக்கும் படை அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தட்டும்.

கோவையில்  வாக்காளர்களுக்கு தங்கத்தோடு, ரூ.2000 பணம் கொடுக்கிறார்கள். அடுத்த 10 நாட்களில் இன்னும் அதிக இலவச பொருட்களை கோவை மக்களுக்கு வழங்க இருக்கிறார்கள். அதனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது பற்றி பேச திமுகவுக்கு உரிமை இல்லை.

பாஜக வேட்பாளர்களின் அனைத்து தொகுதிகளிலும் சோதனை நடத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதி புகாரளித்திருப்பது, ஒரு வீட்டிலிருந்து திருடன் ஓடி வந்து காவல்துறையை குழப்புவதற்காக திருடன், திருடன் என்று சொல்வது போல உள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது உறுதி” என்றார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐ.பெரியசாமி மீதான சூமோட்டோ வழக்கு: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

புதிய வரலாற்று சாதனை படைத்த மும்பை இந்தியன்ஸ்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share